மிதுனம் மார்ச் மாத பொதுப்பலன்கள் 2023
மிதுன ராசி அன்பர்களே! இந்த மாத ஆரம்பத்ததில் உங்கள் கவனம் முழுவதும் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதில் இருக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் ஆன்மீக விஷயங்களில் உங்கள் நாட்டம் இருக்கும். உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதிலும் உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பதிலும் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். என்றாலும் உங்கள் முயற்சிகளுக்கு உரிய பலன் கிட்டாமல் நீங்கள் பதட்டம் கொள்ள நேரலாம். இந்த மாத இறுதியில் வீட்டு மராமத்துப் பணிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள்.
உத்தியோகம் :
பணியிடத்தில் நீங்கள் உங்கள் பணிக்கான அங்கீகாரம் பெற மிகவும் புத்திசாலித்தனத்துடனும் கடினமாகவும் உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் இருந்து நீங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். மாதத்தின் முதல் பாதியில் உங்கள் பணியில் சில பின்னடைவுகள் இருக்கலாம். பிற்பகுதியில் நிலைமை சீரடையும். உங்கள் வருமானமும் பெருகும். உங்கள் மேலதிகாரிகள் மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
காதல் / குடும்ப உறவு :
இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கேற்ற காதல் துணையை நீங்கள் கண்டு கொள்வீர்கள். உங்கள் காதல் உறவு திருமண உறவாக மாறலாம். மாதத்தின் இரண்டாம் பாதியில் நீங்கள் சில போராட்டங்களை சந்திக்க நேரலாம். என்றாலும் உங்கள் விருப்பங்கள் நிறைவேறக் காண்பீர்கள். திருமாமண தம்பதிகள் உறவில் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தும்.வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உணரச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : ராகு பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் உங்கள் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை முதலீடுகள் மூலம் மிதமான அல்லது குறைந்த ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஆபத்தில்லாத பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. இந்த மாதம் நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள். உங்கள் வங்கி இருப்பு உயரும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் ஊக வணிகத்தில் நீங்கள் ஈடுபட வாய்ப்புள்ளது. அதன் மூலம் லாபம் காண்பீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
ஆரோக்கியம் :
மாத இறுதியில் உங்கள் ஆரோக்கியம் சீர்குலைய வாய்ப்புள்ளது. தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்பட நேரலாம். உங்கள் உடல் வெப்பம் திடீரென அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் இரத்த அழுத்தம் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
தொழில் :
தொழில் செய்யும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் தொழிலுக்கான நிதிகளை நிர்வகிப்பதில் சில கடினமாக தருணங்களை கடக்க நேரலாம். உங்களில் ஒரு சிலர் தொழில் வழிகாட்டிகளாக / ஆலோசகராக செயல்பட வாய்ப்புள்ளது. இந்த மாதம் பணப்புழக்கம் மிதமாக இருக்கலாம். இந்த மாதம் நீங்கள் தொழிலை நிர்வகிக்கும் கலையை கற்பீர்கள்.
தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை
தொழில் வல்லுனர்கள் :
மிதுன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தொழிலில் சில போராட்டங்களை சந்திக்க நேரும். கலவையான பலன்கள் கிட்டும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் தொழிலுக்கான அங்கீகாரம் பெரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் மேற்கொள்ளும் தொழில் நீண்ட காலப் பலன் அளிக்கும் வகையில் இருக்கும். பெண் தொழில் வல்லுனர்கள் மாத இறுதியை விட, மாத ஆரம்பத்தில் பல நல்ல பலன்களைக் காண்பார்கள்.
உங்கள் தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை
மாணவர்கள் :
மிதுன ராசி மாணவர்கள் இந்த மாத ஆரம்பத்தில் சில போராட்டங்களை சந்தித்தாலும் மாதம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுவார்கள். தேர்வுகளை சிறப்பாக எழுதி முடிப்பார்கள். தேர்வு நேரத்த்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. திட்டமிட்டு படிக்க வேண்டியிருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை

Leave a Reply