மீனம் மார்ச் மாத பொதுப்பலன்கள் 2023
மீன ராசி அன்பர்களே! நீங்கள் இந்த மாதம் உங்கள் சுய முன்னேற்றம் மற்றும் சுய மரியாதையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இந்த மாத ஆரம்பத்தில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். மூத்த உடன் பிறப்புகளுடனான உறவில் எச்சரிக்கையும் கவனமும் அவசியம். அவர்களுடன் பேசும் போது எச்சரிக்கையும் கவனமும் அவசியம்.
உத்தியோகம் :
பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படலாம். இந்த மாதம் உத்தியோகம் சிறப்பாக இருக்கும். என்றாலும் மாதத்தின் முதற்பகுதியில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். உத்தியோகம் மூலம் பண வரவு இருக்கலாம்.. தூக்கமின்மை காரணமாக பணியிடத்தில் நீங்கள் பதட்டமாக உணரலாம்.
காதல் / குடும்ப உறவு :
உறவு நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது அக்கறை செலுத்துவார்கள். ஆதரவாக இருப்பார்கள். என்றாலும் குடும்ப விஷயங்கள் குறித்து அவ்வப்போது சில வாக்கு வாதங்கள் வந்து போகலாம். மாதத்தின் இரண்டாம் பகுதியில் குடும்ப சூழ்நிலை சற்று கடினமாக இருப்பதை உணர்வீர்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் முழுவதும் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். இந்த மாதம் திடீர் பணவரவு ஏற்படலாம். அதே சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை குறித்து அல்லது வீடு புணரமைப்பு குறித்த செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரலாம். விலை மதிப்பு மிக்க பொருள் ஏதாவது களவு போக வாய்ப்பு உள்ளது. மருத்துவமனை மற்றும் மருந்து வாங்கும் வகையில் செலவுகளை எதிர் கொள்ள நேரலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்க நிலை இருக்கலாம். எனவே உங்கள் ஆரோக்கியம் மிதமாக இருக்கலாம். தூக்கமின்மையே உங்கள் அசௌகரியத்திற்கு காரணமாக அமையலாம். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் பதட்டநிலை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. உங்கள் சிந்தனை உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உங்கள் வாழ்க்கைத் துணை / தாயார் ஆரோக்கியத்திற்காக நீங்கள் செலவு செய்ய நேரலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
தொழில் :
தொழிலைப் பொறுத்தவரை கலவையான பலன்கள் காணப்படலாம். நிதிப்பற்றாக்குறை காரணமாக தொழிலை நிர்வகிப்பதில் சில சிக்கல்கள் இருக்கலாம். செலவுகளை கட்டுப்படுத்த இயலாத நிலை இருக்கலாம். கடன் சுமை தொழிலில் அதிகரிக்கலாம். எனவே தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பட்ஜெட் அமைத்து செலவுகளை மேற்கொள்வது நல்லது. நிபுணர்களின் தொழில் குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு அதன்படி நடப்பது நல்லது.
தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை
தொழில் வல்லுனர்கள் :
தொழில் வல்லுனர்களுக்கு சிறந்த மாதமாக இந்த மாதம் இருக்கலாம். வழிகாட்டிகளின் ஆலோசனை உங்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும். பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்ல்லாம்.. கற்பித்தல், கல்வி, தத்துவம் போன்ற துறைகளில் தொழில் வல்லுனர்கள் சிறப்பாக சாதிக்க ஏற்ற காலமாக இந்த மாதம் இருக்கும். மேலதிகாரிகளுடன் உறவு சிறப்பாக இருக்கும்.
தொழிலில் முன்னேற்றம் காண : பிருகஸ்பதி பூஜை
மாணவர்கள் :
இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள். உங்கள் கவனத் திறன் அதிகரிக்க முறையான தூக்கம் மேற்கொள்ள வேண்டும். உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, கவனத் திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் மற்றும் புதன் கிரக வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

Leave a Reply