கல்வியும் செல்வமும் ஒருங்கே பெற இந்த ஒரு வழிபாட்டை மேற்கொண்டாலே போதும்.

பொதுவாக கல்வி இருந்தால் செல்வம் இருக்காது. செல்வம் இருந்தால் கல்வி இருக்காது. கல்வியும் செல்வமும் ஒருங்கே இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் கல்வி இருந்தால் செல்வத்தை சேர்க்கலாம். செல்வத்தின் அதிபதியாக லக்ஷ்மி தேவி திகழ்கிறாள். கல்விக்கு அதிபதியாக குருவாக ஹயக்ரீவர் திகழ்கிறார். கல்வியும் செல்வமும் ஒருங்கே கிடைக்கப் பெற லக்ஷ்மி ஹயக்ரீவரை வணங்குவது சிறப்பு. லக்ஷ்மி ஹயக்ரீவர் யார்? அவரை எப்படி வழிபட வேண்டும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
விஷ்ணு ஹயக்ரீவராக வேதம் மீட்ட கதை:
முன்னொரு காலத்தில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் இருந்தார்கள். அவர்கள் குதிரை முகம் கொண்டவர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை. அதற்கு என்ன செய்வது என்று யோசித்தார்கள். அப்பொழுது அவர்கள் சிந்தையில் படைக்கும் தொழில் தான் முதன்மை எனப் பட்டது. அதற்கு வேதம் தேவைப்பட்டது. எனவே படைக்கும் தொழிலுக்கு அதிபதியான பிரம்மாவின் வேதத்தை திருடி எடுத்துக் கொண்டு கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டனர். பிரம்மா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். பின்பு விஷ்ணுவிடம் சென்று வேதத்தை மீட்டுத் தருமாறு வேண்டிக் கொண்டார். உடனே விஷ்ணு குதிரை முகம் கொண்ட அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்றார். “ஹய” என்றால் குதிரை “கிரீவ” என்றால் கழுத்து. கழுத்து வரை குதிரை முகம் கொண்ட அவதாரமாக ஹயக்ரீவர் விளங்குகிறார். மது கைடபருடன் சண்டையிட்டு வேதத்தை மீட்டுக் கொண்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார். அந்த நேரத்தில் லக்ஷ்மி தேவி விஷ்ணுவின் மடியில் அமர்ந்து அவரது உக்ரத்தை சாந்தப் படுத்தினார். வேதத்தை காத்ததால் ஹயக்ரீவர் கல்விக் கடவுளாகத் திகழ்கிறார். இவர் சரஸ்வதி தேவிக்கே குருவாக விளங்குகிறார். லக்ஷ்மியுடன் கூடி இருக்கும் போது இவர் செல்வத்தையும் வழங்குகிறார்.
லக்ஷ்மி ஹயக்ரீவர் வழிபாடு:
கல்வியும் செல்வமும் ஒரு சேர வேண்டும் எனில் லக்ஷ்மி ஹயக்ரீவரை வணங்க வேண்டும். இந்த வழிபாட்டை பௌர்ணமி அன்று மேற்கொள்ளலாம். அல்லது வெள்ளிக்கழமை அன்றும் மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு லஷ்மி ஹயக்ரீவர் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை இந்த படம் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் பெருமாளின் படத்தையே வைத்து வணங்கலாம். இவருக்கு ஏலக்காய் மாலை சாற்ற வேண்டுயது மிக மிக முக்கியமானது. அதன் பிறகு தீபம் ஏற்றி வைத்து நீங்களும் உங்கள் குழந்தைகளும் வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே துளசி இலைகளை கையில் கொண்டு அவருக்கு கீழே உள்ள இந்த மந்திரத்தை ஜெபித்தபடி துளசி அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு . பசும்பாலை காய்ச்சி அதில் ஏலக்காய் போட்டு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும் இது தான் மிகவும் முக்கியம். இந்த வழிபாடு முடிந்த பிறகு படைத்த நெய்வேத்திய பாலை குழந்தைகளுக்கு முதலில் கொடுத்து விட்டு அதன் பிறகு நீங்களும் அருந்தலாம். இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வந்தால் உங்கள் வீட்டில் சரஸ்வதி கடாட்சம் மற்றும் லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.
ஹயக்ரீவ மூல மந்திரம்:
உக்தீக ப்ரண வோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய ஸர்வம் போதய! போதய
