சாணக்கியரின் பொன் மொழிகள்

சாணக்கியர் மிகப் பெரும் ஞானி. இவர் அர்த்த சாஸ்திரம் என்னும் நூலை எழுதியவர். நாம் எப்படி வாழ வேண்டும். எதை செய்தால் நன்மை கிட்டும் எதை செய்தால் தீமை கிட்டும் என்று நமக்கு கூறிச் சென்றுள்ளார். அவற்றுள் பத்து அறிவுரைகளை இங்கு காண்போம்.
∙ சந்தேகத்துடன் தொடங்கும் காரியம் சங்கடத்தில் முடியும்
∙ விதியை நம்பிக் கொண்டிருப்பவன் எதையும் செய்ய மாட்டான்
∙ நல்லவர்களுக்கு உதவாமல் போனாலும் பரவாயில்லை, தீயவர்களுக்கு உதவாதீர்கள்
∙ தேவைக்கு மீறி அதிகமாக உணவு உண்பவர்கள் உடல் நலம் சீர் கெட்டு பல உடல் உபாதைகளை எதிர்காலத்தில் அடைந்து அழிந்து போவார்கள்
∙ அறிவு இருந்தும் திறமையாக அதனை பயன்படுத்தாவிட்டால் உலகம் அவனை மதிக்காது
∙ ஒருவருக்கு பணத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால், அது கூடிய விரைவிலேயே அழிந்து விடும்
∙ ஆசிரியன், தலைவன், நண்பன், அறிவாளி மற்றும் முட்டாள் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
∙ தங்கள் குருவின் வார்த்தைகளைக் கேட்காதவர்கள், வாழ்க்கையில் பெறும் அழிவை சந்திப்பார்கள்.
∙ முதலாளியின் குணம் அறிந்தவர்கள் பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.
∙ மென்மையாகப் பேசுபவர்களுக்கு விரோதிகள் இல்லை
