நோய் என்பது மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. இது மனதிலோ அல்லது உடலிலோ தோன்றும் அசாதாரண நிலை என்று கூறலாம். ஒருவரிடம் செல்வம் மிகுந்து இருந்தாலும் அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் அதனை அனுபவிக்க இயலும். எனவே ஆரோக்கியமே சிறந்த சொத்து என்று கூறலாம்.
தற்காலத்தில் நோய்கள் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றன. சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை பல பேர் நோயினால் இன்னலுறுகிறார்கள். அதற்கு நமது உணவு முறைகள் தான் காரணம். இன்றைய இயந்திர கதி வாழ்க்கையில் அதிகம் பேர் வெளி உணவைத் தான் விரும்புகிறார்கள். இவற்றில் பல உணவுகள் ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தக் கூடியது. மேலும் நமது நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கேற்ற உணவை உண்ணாமல் பல்வேறு கலாச்சார உணவுகளையும் ஆசைப் பட்டு உண்பதன் மூலம் நாம் பல நோய்களுக்கு ஆளாகிறோம். இதில் முக்கியமாக இடம் பெறுவது ஒவ்வாமை ஆகும். இதனால் இளநரை, முடி உதிர்தல் போன்றவை சாதாரணமாக எங்கும் காணப்படுகிறது இதை யாரும் மறுக்க முடியாது. இவை எல்லாம் நோய் ஏற்படுவதற்கான வெளிக் காரணங்கள் ஆகும். நோயானது உள் அகக் காரணங்களாலும் ஏற்படலாம். நோய்கள் வலி மற்றும் கடும் துன்பத்தை ஏற்படுத்துவன. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் நோய் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இவற்றில் இருந்து விடுபட நாம் இறைவன் அடியை நாடுவது நன்மை பயக்கும். நோய் தீர்க்க மருத்துவக் கடவுளாக இருப்பவர் தன்வந்தரி. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது இவர் அமிர்த கலசத்துடன் தோன்றினார் என்று கூறப்படுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது. இவரை பக்தியுடன் தினமும் வணங்கினால் நோயே நம்மை அணுகாது எனலாம்.
நோய் வராமல் பாதுகாக்கவும், தீராத நோயில் இருந்து விடுபடவும் கீழ்கண்ட மந்திரத்தை ஜெபியுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய வினாசனாய த்ரை லோக்யநாதாய
ஸ்ரீ மகா விஷ்ணவே நமஹ
இந்த மந்திரத்தை தினமும் 21 முறை சொல்வதன் மூலம் உங்கள் தீராத நோய்கள் தீரும். நோய்கள் உங்களை அண்டாது. எல்லாவிதமான எதிர்மறை ஆற்றல்களும் விலகும்.

Leave a Reply