விநாயகருக்கு செய்யும் இந்த எளிமையமான பரிகாரம் மூலம் நீங்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்தும் வெளிவரலாம்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் தான் எதனை எத்தனை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள். ஒரு சிலருக்கு படிப்பதில் பிரச்சினை. ஒரு சிலருக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை. ஒரு சிலருக்கு கிடைத்த வேலையில் பிரச்சினை. சிலருக்கு கல்யாணம் ஆகவில்லை என்று பிரச்சினை, சிலருக்கு குழந்தைப் பேறு இல்லை என்று பிரச்சினை ஒரு சிலருக்கு வருமானம் இல்லை என்று பிரச்சினை. ஒரு சிலருக்கு கடன்களால் பிரச்சினை. ஒரு சிலருக்கு தொழிலில் பிரச்சனை. ஒரு சிலருக்கு குடும்ப ஒற்றுமை இல்லை என்று பிரச்சினை. பிரச்சினையின் வடிவம் வேறு வேறு தான் என்றாலும் அந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் மனக் குழப்பங்கள், சஞ்சலங்கள், சண்டை சச்சரவுகள் எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கிறது. வாழ்வில் பிரச்சினை என்றால் தாங்கிக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு வாழ்க்கையே பிரச்சினை தான் என்றாகி விடுகிறது. இதற்கு என்ன தான் செய்வது?
நமது வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் நமது கர்ம வினை தான் காரணம். இதில் இருந்து விடுபட நாம் இறைவனின் அடியைத் தான் நாட வேண்டும். வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினையில் இருந்து விடுபட முழுமுதற் கடவுளாம் கணபதியை நாடினாலே போதும். கஜானன், விநாயகன், யானை முகத்தவன் என்று பல பெயர்களைக் கொண்ட விநாயகர் வணங்குவதற்கு எளியவர். எளிய பரிகாரம் மூலம் இவரை வணங்குவதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடும். அந்த எளிய பரிகாரத்தைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்தப் பரிகாரத்திற்கு தேவைப்படும் பொருட்கள் மூன்று. அவை சிறிதளவு, பச்சரிசி, இரண்டு ஏலக்காய், சிறிதளவு நாட்டு சர்க்கரை. இந்தப் பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும்.
எப்பொழுதும் போல வீடு மற்றும் பூஜை அறையை துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குளித்து முடித்து தூய ஆடை அணிந்து கொள்ளுங்கள். பிள்ளையார் படம் அல்லது விக்கிரகம் முன்பு விளக்கேற்றி வையுங்கள். பிள்ளையாருக்கு மஞ்சள், குங்குமம், அட்சதை, அருகம்புல், பூ முதலியவற்றை உங்கள் விருப்பத்திற்கேற்ப சார்த்துங்கள். பிறகு ஒரு தட்டில் சிறிதளவு, பச்சரிசி, இரண்டு ஏலக்காய், சிறிதளவு நாட்டு சர்க்கரை போன்றவற்றை பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்யுங்கள். (பிறகு இதனை நீங்கள் பாயசம் செய்து பரிமாறலாம்.) மனதார உங்கள் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.இவ்வாறு தொடர்ந்து 16 வாரங்கள் செய்து வர உங்கள் பிரச்சினைகள் படிப்படியாக தீர்வுக்கு வரும்.
இந்த பரிகாரத்தை சில காரணங்களால் இடையில் செய்ய முடியாவிட்டால் கூட அதற்கு பிறகு நீங்கள் தொடர்ந்து செய்து வரலாம். இது செய்வதற்கு எளிய பரிகாரமாக இருந்தாலும் சிறந்த பலனை அளிக்கக் கூடியது.ஏலக்காய் லடசுமிக்கு உகந்தது. எனவே லட்சுமி தேவியின் அருளால் உங்கள் பிரச்சினைகள் எளிதாக தீரும். பணம் இருந்தால் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும். இந்த பரிகாரம் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதுடன் லட்சுமி கடாட்சத்தையும் கொண்டு சேர்க்கும். லட்சுமி தேவியின் அருளால் செல்வம் பெருகும். பிறகு என்ன. உங்கள் மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் தீர்வுக்கு வரும். இந்த எளிய பரிகாரத்தை நீங்களும் முயன்று பாருங்கள்.











