AstroVed Menu
AstroVed
search
search
x

எலுமிச்சை பழத்தை பிரசாதமாக பெற்றால் குழந்தை வரம் அருளும் அதிசய முருகன் கோவில்

dateJune 13, 2023

இரட்டைக் குன்று முருகன் கோவில்: 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் மிகவும் புகழ் பெற்ற பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் எனவும் அழைக்கப்படுகிறது.இந்த ஆலயத்தின் கருவறையில் செப்பினாலான வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது.

பங்குனி திருவிழா

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது இரட்டை குன்றின் மீது அமைந்துள்ள முருகன் அருகில் வைக்கப்பட்டுள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் வீதம் 9 நாட்களும் வைத்து பூஜை செய்யப்படும். பத்தாவது நாளில் காவடி பூஜை  நடைபெறும். காவடி பூஜை முடிந்ததும் மறுநாள் இரவு அன்று இரவு ஆலயத்தில் இடும்பன் பூஜை நடைபெறும்.  

ஏலத்தில் விடப்படும் எலுமிச்சம்பழம்

10 நாள் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். பதினோறாவது அந்த எலுமிச்சைப் பழங்கள் ஏலம் விடப்படும்.எலுமிச்சை பழத்திற்கான ஏலம்  1 ரூபாயில் இருந்து தொடங்கும். ஏராளமான பேர் இந்த ஏலத்தில் கலந்து கொள்வார்கள். அக்கம் பக்கம் ஊரில் இருந்தும் வந்த மக்கள் இந்த ஏலத்தில் பங்கு கொள்வார்கள். எனவே ஏலத் தொகை ஏறிக் கொண்டே செல்லும்.   

பிரசாதமும் புத்திர பாக்கியமும் :

இந்த எலுமிச்சை பழங்களை ஏலம் எடுப்பவர்களுக்கு எலுமிச்சை பழத்துடன் இடும்பனுக்கு படைக்கப்பட்ட ஒரு உருண்டை கருவாடு சாதம் வழங்கப்பட்டது.
பிரசாதத்தை அங்கேயே உண்டுவிட்டு, அடுத்த நாள் காலை வீட்டில் பூஜை செய்து அந்த எலுமிச்சை பழத்தை கொட்டையோடு சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கப்படுகிறது. இதனால் கண்டிப்பாக புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதன் காரணமாக உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏலம் எடுக்க இந்த ஆலயம் வருவார்கள். குழந்தையில்லாத தம்பதியினர் மட்டும் இன்றி  வியாபாரம் செய்பவர்கள், வீடுகட்ட முயல்பவர்கள், தொழில் செய்ய முனைவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் என பலர் தங்கள் குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் கலந்துகொண்டு ஏலம் எடுப்பது வழக்கம். இந்த விழாவில் நம்பிக்கையோடு கலந்து கொள்பவர்கள் நிச்சயம் நன்மை பெறலாம் என்பது ஐதீகம்.  


banner

Leave a Reply