Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2025 | Kumbam Rasi Sani Peyarchi Palangal 2023-2025

December 22, 2022 | Total Views : 1,116
Zoom In Zoom Out Print

கும்பம் ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப்பலன்கள் :

கும்ப ராசி அன்பர்களே!  உங்கள்  ராசியான கும்ப ராசியில் சனி பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சி ஜனவரி 17, 2023 அன்று நடக்கிறது. இது மார்ச் 29, 2025 வரை  இருக்கும். சனி உங்கள் ராசியிலிருந்து 1 ஆம் வீட்டையும் 12 ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார்.

இந்த பெயர்ச்சி உங்கள்  ராசியில் நடக்கப் போகிறது. எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனச்சோர்வு, பற்றின்மை மற்றும் சங்கடங்கள் இருக்கலாம். நீங்கள் தெளிவாக செயல்பட வேண்டும். சனிப்பெயர்ச்சி எப்போதுமே கற்றலுக்குப் பெயர் பெற்றது, எனவே முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள். சனி உங்கள் ராசியில் மாறும்போது, ​​முன்னேற்றம் மெதுவாக இருக்கும். உங்கள் முயற்சிகள் நல்ல பலனைத் தராமல் போகலாம். மேலும் உங்கள் ஆற்றல் நிலைகள் குறைவாக இருக்கலாம். பொறுமை மிகவும் முக்கியமானது. எப்போதும் அமைதியையும் நெகிழ்வுத்தன்மையையும் பராமரிக்கவும். தினமும் பிரார்த்தனைகளுக்கு நேரத்தை செலவிடுங்கள். இது அதிசயங்களைச் செய்யும். உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாவிட்டால், உங்கள் நலம் விரும்பிகளிடம் பேசி நல்ல தெளிவு பெறவும்.

நற்பலன்கள் யாதெனில், சமூகத்திலும் பணியிடத்திலும் உங்கள் நற்பெயர், செல்வம் மற்றும் மதிப்பு உயரும் என்பது உறுதி. ஜூலை 12, 2023 முதல், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருந்தாலும், விஷயங்கள் மெதுவாக நகரும். சில கும்ப ராசிக்காரர்கள் வேலையின் காரணமாக வெளிநாட்டுக்கு இடம் பெயர்வார்கள். செலவுகள் அதிகமாக இருந்தாலும், இரண்டையும் சமன் செய்ய நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள்.

கும்பம் – உத்தியோகம்

பணியிடத்தில் பொறுப்புகள் அதிகமாக இருக்கலாம். அதிக பணிச்சுமை அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். உங்கள் தொழிலில் மெதுவான முன்னேற்றம் ஏற்படலாம். சிலர் நல்ல வேலை தேடலாம். ஆனால்  நிறுவனம் மற்றும் பணிச்சூழல் குறித்து சாத்தியமான அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் பணித்திறனுக்கு பெயர் பெற்றிருந்தாலும், உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உங்கள் பணியின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்படும். தற்போதைய காலகட்டத்தை கற்றுக் கொள்வதற்கான நேரமாக கருதுங்கள். அதிகம் கவலைப்பட வேண்டாம். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.

கும்பம் – காதல் / குடும்ப உறவு

நெகிழ்வுத்தன்மை உங்கள் உறவில் உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்யும். அன்புக்குரியவர்கள் உங்கள் கருத்துகளுக்கு எதிராக இருப்பார்கள். அது சில மோதல்களுக்கு வழிவகுக்கும். பல விஷயங்கள் உங்களை மனச்சோர்வடையச் செய்யும். நம்பிக்கையற்றதாக இருக்கும். முடிந்தவரை சமரச மனப்பான்மையைக் கடைப்பிடிக்கவும். மணமாகாதவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளை மேம்படுத்த இது சிறந்த நேரம் அல்ல. மக்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களைப் பயன்படுத்தலாம்.

கும்பம் – திருமண வாழ்க்கை

திருமணமான தம்பதிகள் தங்கள் உறவில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கக்  காணலாம். கோபம் அதிகரிக்கும் போது அமைதியாக இருப்பது நல்லது. திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இன்னும் சிறிது  காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஏனெனில் திருமணம் முடிக்க இது சரியான நேரம் அல்ல. நேரம் மிகவும் ஆதரவாக இல்லாததால், உங்கள் சிந்தனையில் தெளிவு வேண்டும். நீங்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

கும்பம் – நிதிநிலை

உங்கள் செலவுகளில் கவனமாக இருங்கள். உங்கள் நிதி விஷயங்களில் சில பின்னடைவுகள் இருக்கலாம். தேவையான பண வரவு   இருக்கலாம். ஆனால் நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கலாம். உங்கள் பணம் மற்றும் சேமிப்பு தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கு முன் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். புதிய வணிகம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான ஒப்பந்தங்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறிது காலத்திற்கு ஒத்திப் போடுங்கள். முதலீடுகள் கூட கவனமாகச் செய்த பின்னரே செய்ய வேண்டும். விதிமுறைகளில் நீங்கள் திருப்தி அடைந்தவுடன், தொடரவும். உங்கள் வேலையைச் செய்ய குறுக்குவழிகளுக்குச் செல்லாதீர்கள் அல்லது சட்டவிரோதமான வகையில் நடந்து கொள்ளாதீர்கள். உங்கள் பணியாளர்களை சனி பிரதிநிதித்துவம் செய்வதால் அவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். இது சனியை மகிழ்விக்கும் மற்றும் அதன் எதிர்மறை தாக்கத்தை குறைக்கும்.

கும்பம் – மாணவர்கள்

கவனம் செலுத்தினால் வெற்றி சாத்தியமாகும். இந்த நேரத்தில் பல தடைகள் ஏற்படலாம். உங்கள் படிப்பிற்கான தெளிவான திட்டத்தை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஆர்வம் காட்டினால் பிரகாசிக்கலாம். பாடங்கள் பற்றிய புரிதல் இல்லை என்றால் உங்கள் ஆசிரியர்களிடம் கேளுங்கள் அல்லது நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில்  தேர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும். ஆராய்ச்சிப் படிப்புகள் மேற்கொள்பவர்கள் வெற்றி பெறலாம். படிப்பிற்காக வெளிநாடு செல்ல விரும்புவோர், கல்வியில் சிறப்பாக செயல்பட   சரியான பல்கலைக்கழகங்களைக் கண்டறிய வேண்டும்.

கும்பம் – ஆரோக்கியம்

தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும் மற்றும் உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவற்றில் பங்கேற்கவும். மது அருந்துவதைத் தவிர்க்கவும். காரமான உணவை உட்கொள்வதை தவிர்க்கவும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும். முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே உடனடியாக கவனம் செலுத்துங்கள். தொடர்ந்து உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். சிறந்த ஆரோக்கியத்திற்காக அதிக பழங்கள் மற்றும் கீரைகளை சாப்பிடுங்கள்.

கும்பம் – பரிகாரங்கள்

தெருவோர தொழிலாளர்களுக்கு காலணிகளை வாங்கி அளியுங்கள்

வேலையாட்களை மதிப்புடன் நடத்துங்கள் முடிந்தால் அவர்களுக்கு உதவுங்கள்

கீழ்கண்ட மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும்:

“ஓம் நீலாஞ்சனா சமாபாசம் ரவி புத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைச்ச்சரம்”

banner

Leave a Reply

Submit Comment