பொதுப்பலன் :
உங்கள் ராசியிலிருந்து 2 ஆம் வீடாகிய மிதுனத்தில் மே 15, 2025 அன்று குரு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி ஜூன் 2, 2026 அன்று வரை இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் ராசிக்கு 4 வது வீடு, 6வது வீடு, மற்றும் 8வது வீட்டில் குருபகவானின் பார்வை இருக்கும்.
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்தக் காலகட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பணியிடத்தில் அனைவரிடமும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நீங்கள் வளர்ச்சியும் முன்னேற்றமும் காணலாம். மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெற நீங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நன்கு புரிந்துகொள்ள பொறுமை உதவும். நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் நோக்கங்களை நீங்கள் சீரமைக்கலாம். இந்த காலகட்டத்தில், சரியான தகவல் தொடர்புகளை பராமரிக்க வேண்டும்.
கணவன் மனைவி உறவில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும். தவறான புரிதல்கள், மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் முரண்பட்ட பழக்கவழக்கங்கள் காரணமாக பிரச்சினைகள் எழலாம். பொறுமை அவசியம், ஏனென்றால் அதிக பணிகள், குடும்பக் கடமைகள் அல்லது நிதி நெருக்கடிகள் போன்றவற்றால் மன அழுத்த சூழ்நிலைகள் உருவாகலாம்.
குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடனும் நீங்கள் நல்லுறவு மேற்கொள்வீர்கள். ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்வீர்கள். அன்பு நிறைந்த சூழ்நிலை இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான பிணைப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். சில சிறிய உடல்நலக் கோளாறுகள் இருக்கலாம். குறிப்பாக தோள்பட்டை வலி மற்றும் வயிற்றுப் புண்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக, இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்கள் உடல்நிலை சீராக இருக்கும்.
முதுகலைப் பட்டதாரி மாணவர்கள் வெற்றி பெற அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்க வேண்டும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் தங்கள் விசா அனுமதி பெற இன்னும் சற்று காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
காதல் / குடும்ப உறவு
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் உங்கள் அன்றாட பணிகளை இணைந்து மேற்கொள்ளும் போது புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டு செயல்பட வேண்டும். பணிச் சுமைகள், குடும்பப் பொறுப்புகள் அல்லது நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். எனவே பொறுமையாக செயல்பட வேண்டும். .
குழந்தைகள் மற்றும் வீட்டில் இருக்கும் வயதில் மூத்த உறுப்பினர்களுடன் உங்களின் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். பரஸ்பர பகிர்ந்துணர்வு இனிமையான தருணங்களை மட்டும் இன்றி இனிமையான நினைவுகளையும் உங்களுக்கு பரிசாக வழங்கும்.
உத்தியோகம்
இந்த காலகட்டத்தில் உத்தியோகத்தில் நீங்கள் சில தடைகளை சந்தித்தாலும் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடச் சூழல் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே இந்த கட்டத்தில், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அலுவலக நிர்வாகத்துடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வது அவசியம். இந்த உறவு உங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமையும். மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம்.
திருமண வாழ்க்கை
கணவன் மனைவிக்கு இடையே தவறான புரிதல்கள், குழப்பங்கள் அல்லது வாக்குவாதங்கள் இருக்கலாம். இதன் காரணமாக சண்டைகள் மற்றும் பதற்றம் நிறைந்த சூழல் இருக்கலாம். மேலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் சில சிரமங்கள் இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். வேலை அழுத்தம் மற்றும் குடும்ப சண்டை போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்த சூழ்நிலைகள் ஏற்படலாம்.
நிதிநிலை
நிதிநிலையைப் பொறுத்தவரை இந்தக் காலகட்டத்தில் ஸ்திரமானதாக இருக்கும். படிப்படியாக மேம்படும். பெரிய அளவில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உங்கள் செலவுகளை வரம்புக்குள் வைத்திருக்க வேண்டும். வளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் உங்களுக்கு பணத்தை சேமிப்பு செய்யும் வாய்ப்பு கிட்டும். இது எதிர்காலத்திற்கு தேவையான பாதுகாப்பான நிதிநிலைக்கு அடித்தளத்தை உருவாக்கும். உங்கள் நிதிநிலையில் நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மாணவர்கள்
மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சி மேற்கொள்வார்கள். பெற்றோர் உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பார்கள். இளங்கலை பட்டதாரிகள் பிரகாசிக்கலாம். முதுகலை மாணவர்கள் கல்வியில் பிரகாசிக்க படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: ஒரு சிலர் தங்கள் விசா அனுமதிகளுக்காகக் காத்திருக்கலாம். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கை பணிக்கு ஒப்புதல் பெறலாம்.
ஆரோக்கியம்
இந்த பெயர்ச்சிக் காலத்தில் நீங்கள் சிறிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகளை சந்திக்க நேரலாம். அதிக பதட்டங்கள் காரணமாக தோள்பட்டை வலி இருக்கலாம். அது உங்கள் அன்றாட பணிகளை பாதிக்கலாம். ஒரு சிலருக்கு வயிற்றுப் புண், முக்கியமாக மன அழுத்தம் அல்லது உணவுப்பழக்கத்தால் எழுலாம். மற்றபடி உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

Leave a Reply