https://www.astroved.com/tamil/rasi-palan/kumbha/ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன. ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது. நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது. கேது மோட்சகாரகன் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது. இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கும்ப ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 2 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியில் இருந்து 8 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப் போகிறார்கள்.
உத்தியோகம் :-
உத்தியோகத்தைப் பொறுத்தவரை திடீர் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கூடுதல் பணிச்சுமை மற்றும் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் சிறந்த வாய்ப்புகளைக் காணலாம். அதே நேரத்தில் பணியை முடிக்க உங்கள் வேலை நேரத்தை நீட்டிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பலன் கிடைக்கும். இடமாற்றம் நிகழக்கூடும், மேலும் இது உங்கள் தொழில் வளர்ச்சிக்கும் உதவக்கூடும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் அதிகமாக ஈடுபட்டிருக்கலாம், எனவே தெளிவாக திட்டமிட்டு அவற்றைச் செயல்படுத்தவும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு, லாபம் கிடைக்காமல் போகலாம் என்பதால், விரிவாக்க யோசனைகளுக்காக சிறிது காலம் காத்திருக்கவும். புதிய வேலை அல்லது தொழில் தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம், ஆனால் வருமானம் திருப்திகரமாக இருக்காது. அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கு நேரம் ஆதரவாக இல்லை எனவே பொறுமையே முக்கியம்.
ராகு கேது பெயர்ச்சி 2023 பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க
காதல் / குடும்ப உறவு :
ஒற்றையர்களுக்கு இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சி ஆதரவாக இருக்காது எனவே இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஈகோவை கைவிட வேண்டும், இல்லையெனில் அது சிறந்த உறவுக்கு வழிவகுக்காது. வதந்திகளைத் தவிர்க்கவும், உரையாடலின் போது நீங்கள் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் மற்றும் எதிர்மறையான உணர்வைத் தரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தயவு செய்து விட்டுக் கொடுங்கள். அது உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது. வாக்கு வாதங்களில் ஈடுபடுவதன் மூலம் உறவின் சுமுக நிலை பாதிக்கப்படும்.
இந்த பெயர்ச்சிக் காலத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் குறையக்கூடும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்தாலும், அவர்களிடமிருந்து திருப்தி கிடைக்காமல் போகலாம், மேலும் அது தனிமை மற்றும் பற்றின்மை உணர்வைக் கொடுக்கலாம். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் குடும்ப உறுப்பினர்களை விட்டு விலகிச் செல்லக்கூடும், எனவே முடிவெடுப்பதற்கு முன் அத்தகைய திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெற்றோரின் ஆதரவு நடுநிலையாக இருக்கலாம் மற்றும் உடன்பிறப்புகளுக்குள் நிதி மற்றும் சொத்து தொடர்பான தகராறுகள் மற்றும் பிரச்சனைகள் முடிவடையும் வாய்ப்புகள் உள்ளன.
திருமண வாழ்க்கை :-
திருமண வாழ்க்கை சில கவலைகளைத் தரக்கூடும், இரண்டாம் வீட்டில் ராகு இருப்பது சங்கடமான சூழ்நிலைகளைத் தரக்கூடும், எனவே சிறிது காலம் அமைதியாக இருங்கள். தேவையற்ற மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணை உங்கள் யோசனைகள் மற்றும் கருத்துகளுக்கு எதிராக இருக்கலாம். அது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும். அவநம்பிக்கைக்கு வழி வகுக்கும். எனவே உறவு சிக்கல்களில் முடிவடையும். விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் உறவில் அமைதியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
நிதிநிலை :-
இந்த பெயர்ச்சிக் காலத்தில் அதிக செலவுகள் ஏற்படலாம். அதிக வருமானம் வரலாம். என்றாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். பெரும்பாலான செலவுகள் பொருள் சார்ந்த விஷயங்களுக்காக நடக்கலாம். நீங்கள் கடன்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் உங்கள் செலவினங்களைக் கண்காணிக்க வேண்டும்.ஆசை காரணமாக ஆடம்பர செலவுகளை நீங்கள் மேற்கொள்ளலாம். இருக்கும் பணத்தைக் கொண்டு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கவும், உண்மையான தேவை இருந்தால் மட்டுமே நீங்கள் கடன் வாங்க வேண்டும். இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டாம். நீங்கள் ஏற்கனவே ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ளீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள், எனவே நீங்கள் பணம் தொடர்பான விஷயங்களைக் கையாளும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்தவொரு முதலீட்டிற்கும் அல்லது புதிய முயற்சிகளில் இறங்குவதற்கும் இது ஆதரவான நேரம் அல்ல.
மாணவர்கள் :-
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் போகலாம் மற்றும் கூடுதல் கடின உழைப்பு தேவை. கவனச்சிதறல் மற்றும் சோம்பல் உங்கள் முன்னேற்றத்தைக் குறைக்கலாம், எனவே தயவுசெய்து கவனம் செலுத்துங்கள். பாடங்களில் சந்தேகம் இருந்தால் சரியான நபரை அணுகி, சிறந்த தெளிவைப் பெற, அவர்களின் வழிகாட்டுதலைப் பெற முயற்சிக்கவும். கல்விக்கடன் மூலம் வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் பயன்பெறலாம். உயரத்தை அடைய படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெற்றியை அடைவதற்கான நம்பிக்கையை பெற்றோர்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆரோக்கியம் :-
இந்த பெயர்ச்சிக் காலத்தில், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். உங்கள் உணவு முறையில் கட்டுப்பாடு வேண்டும். துரித உணவு மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். உடல்நலக்குறைவு சில பின்னடைவுகளைத் தரலாம் மற்றும் மீள்வதற்கு நேரம் ஆகலாம். முதுகு எலும்பு வலி மற்றும் முழங்கால் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் உங்கள் நிலையை அறிய, அவ்வப்போது உடல்நலப் பரிசோதனை செய்ய வேண்டும். பணி அழுத்தம் மற்றும் பிற கடமைகள் காரணமாக உங்கள் மன அழுத்தம் அதிகமாக இருக்கலாம் மற்றும் இந்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து உங்களை விடுவிக்க, தியானம் மேற்கொள்ளலாம்.
பரிகாரங்கள் :-
1) தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி) மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.
2) செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரத்தையும், தினமும் கணேஷ பஞ்சரத்னம் மந்திரத்தையும் பாராயணம் செய்யவும். அல்லது கேட்கவும்.
3) சர்ப்ப கிரகங்களின் எதிர்மறை விளைவுகளை குறைக்க புஜங்க கவசம் மந்திரத்தை கேளுங்கள்.
4) 3 தேங்காய்களை ஆற்றிலோ அல்லது கடலிலோ காணிக்கையாக்கவும்.
5) மது அருந்துவதை தவிர்க்க்கவும். சைவ உணவை உண்ணவும்.
'ஓம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் கேதுவே நமஹ' என்று 7 முறையும் ஒரு நாளில் ஜெபிக்கவும்.

Leave a Reply