இந்த தூபம் போடுவதன் மூலம் வீட்டில் சண்டை சச்சரவே வராது.
நாம் வாழும் வீடு என்பது ஆலயம் போல இருக்க வேண்டும். வீட்டில் அமைதி குடி கொண்டிருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் கூடாது. இதனை நாம் அனைவரும் அறிவோம். யார் ஒருவரும் சண்டை போட விரும்புவதில்லை. எல்லோரும் அமைதியைத் தான் விரும்புகிறோம் என்றாலும் நம்மால் அவ்வாறு இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டை ஏற்படுகிறது. பின்னர் சரியாகி விடுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு ஒரு சில சமயத்தில் இனம் புரியாத பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் நிம்மதியற்ற நிலை காணப்படும். ஒருவருக்கொருவர் மனக்கசப்புகள் மற்றும் வெறுப்பு காணப்படும். இதற்கெல்லாம் காரணம் கண் திருஷ்டியாக இருக்கலாம்.
வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல மாற்றத்தை உணரலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் கற்பூரம், தர்பை, கல் உப்பு, கடுகு
தர்பை வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை கிரகிக்கும் தன்மை வாய்ந்தது. வெள்ளிக்கிழமை அன்று தூபக்காலில் தர்பை வைத்தது அதில் கற்பூரம் ஏற்றுங்கள் அதன் மேல் சிறிது கல் உப்பு மற்றும் கடுகு போடுங்கள். இந்த தூபத்தை வீடு முழுவதும் காட்டுங்கள். இவ்வாறு தூபம் போடும் போது நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விடும்.
இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வருவதன் மூலம் திருஷ்டி அகலும். இனம் புரியாத பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் அமைதி இருக்கும். உறவுகளுக்கு இடையே நல்லிணக்கம் இருக்கும். ஒருவருக்கொருவர் சுமுக உறவை பராமரிக்க இயலும். சண்டைக்கு மூல காரணமாக இருக்கும் விஷயங்கள் அனைத்தும். கற்பூரம் போலக் கரைந்து விடும்.











