27 நட்சத்திரங்களுக்கான ஆலயங்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு நட்சத்திரத்தில் பிறந்து இருப்போம். ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதுவே அவரது ஜென்ம நட்சத்திரம் ஆகும். அந்த வகையில் நாம் இந்த 27 நட்சத்திரங்களுள் ஒன்றில் பிறந்து இருப்போம். ஒவ்வொரு நடசத்திரத்திற்கும் ஒரு கோவில் உண்டு. அவரவர் தங்கள் பிறந்த நட்சத்திரக் கோவில் சென்று வழிபடுவதன் மூலம் சிறந்த நற்பலன்களைக் காண இயலும். 27 நட்சத்திரங்களுக்கான ஆலயங்கள் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் நட்சத்திரத்திற்கான கோவிலுக்கு சென்று இறைவனின் ஆசிகளைப் பெற்றிடுங்கள்.

அசுவினி- அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில், திருத்துறைப் பூண்டி
பரணி - அக்னீஸ்வரர் கோவில் நல்லாடை மயிலாடுதுறை அருகில்
கார்த்திகை – காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கஞ்சனகரம் மயிலாடுதுறை அருகில்
ரோகினி- ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில்
மிருகசீரிடம் – ஸ்ரீ ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோவில் எண் கண் கொறடாச்சேரி, தஞ்சாவூர்
திருவாதிரை – அருள்மிகு அபய வரதீஸ்வர் கோவில், அதிராமப்பட்டினம், புதுக்கோட்டை
புனர்பூசம் – ஸ்ரீ அதிதீச்வரர் கோவில், வாணியம்பாடி வேலூர் மாவட்டம்
பூசம் – ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் கோவில், விளாங்குளம் , தஞ்சாவூர்
ஆயில்யம் – அருள்மிகு கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி, கும்பகோணம்
மகம் – ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், தவசிமடை, திண்டுக்கல்
பூரம் – ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவில், திருவரங்குளம்
உத்திரம் – அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில், இடையாற்றுமங்கலம், லால்குடி
அஸ்தம் – அருள்மிகு க்ருபா கூபாறேஸ்வரர் திருக்கோவில், கோமல், கும்பகோணம்
சித்திரை – அருள்மிகு சித்திர ரத வல்ல பெருமாள் திருக்கோவில், குருவித்துறை, சோழவந்தான் மதுரை
சுவாதி – அருள்மிகு தாத்திரீச்வரர் திருக்கோவில், சித்துக்காடு, பூந்தமல்லி
விசாகம் – அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில், தென்காசி அருகில், நெல்லை மாவட்டம்
அனுஷம் – அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில், திருநின்றியூர், மயிலாடுதுறை – சீர்காழி செல்லும் வழியில்
கேட்டை – அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில், தஞ்சாவூர் மாவட்டம்
மூலம் – அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோவில் , மப்பேடு தக்கோலம் அரக்கோணம் அருகில்
பூராடம் – அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் கோவில், கடுவெளி, தஞ்சாவூர்
உத்திராடம் – அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், பூங்குடி, ஒக்கூர்
திருவோணம் – பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில், காவேரிப்பாக்கம்
அவிட்டம் – ஸ்ரீ பிரம்ம ஞான புரீஸ்வரர் திருக்கோவில்,கொருக்கை, கும்பகோணம்
சதயம் – அருள்மிகு அக்னிபுரீச்வரர் திருக்கோயில்,திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம்
பூரட்டாதி – அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோவில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர்
உத்திரட்டாதி – சஹஸ்ர லட்சுமீச்வரர் திருக்கோவில், தீயத்தூர், புதுக்கோட்டை
ரேவதி – அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், காருகுடி, தாத்தயங்கார் பேட்டை











