மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து எப்படி மீண்டோம் என்றே தெரியாமல் மீண்டு வர சக்தி வாய்ந்த இந்த தீபத்தை ஏற்றுங்கள். நிச்சயம் இனி கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறக்கும் போதே மூன்று கடன்களுடன் தான் பிறக்கிறோம் அவை தேவ கடன், ரிஷி கடன் மற்றும் பித்ரு கடன். தேவ கடன் என்பது குல தெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பது. ரிஷி கடன் என்பது ரிஷிகளை சாதுக்களை சன்னியாசிகளை அவமானப்படுத்துவதால் ஏற்படுவது. பித்ரு கடன் என்பது முன்னோர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் இருப்பது தாய் தந்தையைக் கைவிடுவது போன்றவற்றால் ஏற்படுவது. முற்பிறவி கடன் மற்றும் இந்தப் பிறவிக் கடன் என நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கடன் சம்பந்தமான பிரச்சினையில் தவிக்கிறோம் இந்தப் பிறவியும் ஒரு கடன் தான் இந்த பிறவிப் பிணி தீரவும் வாங்கிய கடன் அடைக்கவும் பல இறைவழிபாடுகளை நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். யாருக்கும் கடனாளியாக வாழ்வது என்பது விருப்பமில்லாத ஒன்று என்று தான் கூற வேண்டும். என்றாலும் நாம் விரும்பியோ அல்ல்து விரும்பாமலோ கடனாளியாக ஆகி விடுகிறோம்

வாழ்வில் நாம் பணத்தை பிறரிடம் அல்லது வங்கியில் கடன் வாங்குவதற்கு முன் அது அவசியம் தேவையா என்று யோசித்து வாங்குவது நல்லது. கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினார் என்ற கூற்றில் இருந்து கடன் வாங்கினால் எத்துனை அளவு கலக்கம் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள இயலும். எனவே நாம் கடன் வாங்கும் போது நம்மால் அதனை திருப்பிச் செலுத்த முடியமா? என்பதனை சிந்தித்து செயல்பட வேண்டும். அடுத்தவர்களைப் பார்த்து அதை வாங்க வேண்டும் இதனை வாங்க வேண்டும் என்று ஆசையை வளர்த்துக் கொண்டு கடனாளியாக ஆகுதல் கூடாது. அப்படி அவசியம் வாங்க வேண்டும் என்றால் தகுதிக்கு ஏற்றார் போல வாங்க வேண்டும்.
ஒரு சிலர் கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் தவிப்பார்கள். கழுத்தை நெரிக்கும் கடன் தீர திருச்செந்தூர் முருகப் பெருமான வணங்குங்கள். அதற்கு முதலில் திருச்செந்தூர் முருகப் பெருமானின் திரு உருவப் படத்தை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் செய்ய வேண்டும். ஏழு அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றுங்கள். முருகனுக்கு கண்டிப்பாக செவ்வரளி மாலை சாற்றுங்கள். இவ்வாறு 27 வாரம் தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். நடுவில் நிறுத்தாதீர்கள். கடனில் இருந்து வெளி வர வேண்டும் என முருகனை மனதார வேண்டுங்கள். உங்களால் செய்ய முடியாத சந்த்ரப்பம் எனில் குடும்பத்தில் யாரையாவது செய்யச் சொல்லலாம். இவ்வாறு நீங்கள் செய்ய செய்ய உங்கள் கடன் படிப்படியாக குறைவதை நீங்கள் காணலாம்.
இந்த சிறிய பரிகாரத்தை செய்து நீங்கள் பெரும் கடன் தொல்லைகளில் இருந்து வெளிவரலாம்.











