லட்சுமி – குபேரன் அருள் பெற இதை மட்டும் செய்து வாருங்கள்

திரு அருளும் குரு அருளும் கிடைக்கவேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். திரு என்றால் செல்வம். திருமகள் செல்வத்தின் அதிபதி. குரு என்றால் பொன்னன். இந்த உலகில் பிறந்த அனைவரும் பொன்னும் பொருளும் நிறைந்த வாழ்க்கையைத் தான் வாழ விரும்புவார்கள். அவ்வாறு வாழ லட்சுமி தேவியின் கடாட்சம் நமக்கு வேண்டும். அவள் அருள் இருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் நமது இல்லம் தேடி வரும். செல்வத்தின் அதிபதி லட்சுமி தேவி என்றால் அந்த செல்வத்தை பாதுகாத்து பிறருக்கு விநியோகிக்கும் பொறுப்பு கொண்டவர் குபேரன் ஆவார். இவர்கள் இருவரின் அருளும் கிடைத்து விட்டால் பொன்னும் பொருளும் நம்மை நாடி அரும்.
ஸ்ரீதேவியாம் லட்சுமி நமது வீட்டில் குடி கொண்டால் குபேரன் அருளும் தானாக கிடைத்து விடும். லட்சுமி நமது வீட்டில் வாசம் செய்ய வேண்டும் எனில் நமது உடலும் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும். நமது வீடு மற்றும் பூஜை அறை என அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் இருத்தல் கூடாது. நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். நல்ல மந்திர ஓசைகள் வீட்டில் ஒலிக்க வேண்டும். குறிப்பாக கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற லட்சுமி தேவிக்கு உகந்த பாடல்கள் ஒலிக்க வேண்டும். வீட்டில் வசிப்பவர்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் அன்புடனும் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இருந்தால் எளிதாக லட்சுமி தேவியின் அருளைப் பெற்று விடலாம்.
உங்கள் வீட்டில் லட்சுமி தேவி மற்றும் குபேரன் அருளால் பணம் பொங்க ஒரு எளிய வழியைக் காணலாம். ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் சிறிதளவு அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நிறைய சில்லறைக் காசுகளை கொட்டி உங்கள் பூஜை அறையில் வைத்து விளக்கேற்றிய பிறகு இந்த சில்லரை நாணயங்களை உங்கள் கையில் எடுத்து கிண்ணத்தில் மறுபடியும் போடுங்கள். தினமும் அதில் நாணயங்களை சேர்த்துக் கொண்டே வாருங்கள். வாரம் ஒரு முறை அரிசியை மாற்றுங்கள். நாணயங்கள் நிரம்பி விட்டால் அதனை அப்புறப்படுத்தி புது நாணயங்களை சேர்த்துக் கொண்டே வாருங்கள். அப்புறப்படுத்திய நாணயங்களை நீங்கள் சுப காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் இவ்வாறு செய்து வர உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும். இதனை வியாழன் அல்லது வெள்ளி அன்று குரு ஓரை அல்லது சுக்கிர ஓரையில் ஆரம்பிக்கலாம்.
