கண் திருஷ்டியில் இருந்து உங்களை காத்துக் கொள்ள ஞாயிறு தோறும் இதனை செய்யுங்கள்

கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பார்கள். நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் நமது வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களாகவோ பெருமை கொள்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள். பொறாமை கொள்பவர்களாகக் கூட இருக்கலாம். அப்படி அவர்கள் பொறமை கொண்டால் அதுவே திருஷ்டியாகி நம்மை தாக்கலாம். பொதுவாக பிறரின் கண் திருஷ்டியில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நாம் நெற்றியில் கும்குமம், மஞ்சள், சந்தனம், திருநீறு போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும். இவ்வாறு இறை சின்னங்களை நாம் அணியும் போது நமது ஆற்றல் வீணாகாது காக்கப்படும். மேலும் கண் திருஷ்டியில் இருந்து நாம் காக்கப்படுவோம். அது போல முடிக்கயிறு, காலில் கயிறு கட்டுவது போன்றவற்றின் மூலம் திருஷ்டியில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
இந்த கண் திருஷ்டியில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வாரம் தோறும் தவறாமல் ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்து வந்தாலே போதும். வேறு எதுவும் பெரிதாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியான ஒரு எளிய பரிகாரம் என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம். ‘
இரண்டு கைப்பிடி உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் குளிக்கும் நீரில் போட்டு வாரம் ஒரு நாள் அதாவது ஞாயிறன்று குளித்து வருவதன் மூலம் திருஷ்டிகள் யாவும் அகலும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண் திருஷ்டி அகலும்.
எனவே கண் திருஷ்டியை அலட்சியம் செய்யாமல் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த எளிய பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் நம்முடைய வளர்ச்சியின் மீது பொறாமைப்படுபவர்கள், தனிநபர் மீதான கண்திருஷ்டி அல்லது குடும்பத்தின் மீதான திருஷ்டிகள் அனைத்தும் கழிய செய்யும்.
