ஜூலை 2023 மாத விரத மற்றும் விசேஷ நாட்கள் முழு விபரம்

ஜூலை மாதத்தை ஸ்ராவண மாதம் என்று கூறுவார்கள். பருவ மாறுபாடு ஏற்படும் மாதம் ஆகும். 17 தேதி வரை தமிழ் ஆனி மாதமும் பின்பு ஆடி மாதமும் இருக்கும். எனவே ஜூலை மாதம் சிவனுக்கும் அம்மனுக்கும் உகந்த மாதமாக உள்ளது. ஆடி மாதம் என்பதால் அம்மன் வழிபாட்டிற்கு ஏற்ற மாதம். அம்மன் அருள் எங்கும் வியாபித்து இருக்கும் மாதம் ஆகும்.
ஒவ்வொரு மாதமும் விசேஷ நாட்கள் வருகின்றன. ஜூலை மாதம் வரும் விசேஷ நாட்கள் பற்றி இங்கு காண்போம்.
ஜூலை மாத விசேஷ நாட்கள் :
ஜூலை 1 மகா பெரியவாளின் அனுஷ திரு நட்சத்திர தினம்
ஜூலை 2 ஞாயிறு ஜேஷ்டாபிஷேகம்
ஜூலை 3 வியாச பூஜை, குரு பூர்ணிமா
ஜூலை 17 தக்ஷிணாயன புண்ணிய காலம்
ஜூலை 22 (ஆடி 06) சனிக்கிழமை – ஆடிப்பூரம்
ஜூலை 28 மகா பெரியவாளின் அனுஷ திரு நட்சத்திர தினம்
ஜூலை 29 (ஆடி 13) சனிக்கிழமை - மொஹரம் பண்டிகை
ஜூலை மாத முக்கிய விரத நாட்கள் :
ஜூலை 01 (ஆனி 16) சனிக்கிழமை - சனிப்பிரதோஷம்
ஜூலை 03 (ஆனி 18) திங்கட்கிழமை - பெளர்ணமி
ஜூலை 05 (ஆனி 20) புதன்கிழமை - திருவோணம்
ஜூலை 06 (ஆனி 21) வியாழக்கிழமை - சங்கடஹர சதுர்த்தி
ஜூலை 08 (ஆனி 23) சனிக்கிழமை - சஷ்டி
ஜூலை 13 (ஆனி 28) வியாழக்கிழமை - ஏகாதசி, கிருத்திகை
ஜூலை 15 (ஆனி 30) சனிக்கிழமை - சனிப்பிரதோஷம், மாத சிவராத்திரி
ஜூலை 17 (ஆடி 01) திங்கட்கிழமை - அமாவாசை
ஜூலை 21 (ஆடி 05) வெள்ளிக்கிழமை - சதுர்த்தி
ஜூலை 23 (ஆடி 07) ஞாயிற்றுக்கிழமை - சஷ்டி
ஜூலை 29 (ஆடி 13) சனிக்கிழமை - ஏகாதசி
ஜூலை 30 (ஆடி 14) ஞாயிற்றுக்கிழமை - பிரதோஷம்
ஜூலை மாத சுபமுகூர்த்த நாட்கள் :
ஜூலை மாத சுபமுகூர்த்த நாட்கள் :
ஜூலை 05 - ஆனி 20 புதன்கிழமை
ஜூலை 07 - ஆனி 22 வெள்ளிக்கிழமை
ஜூலை 09 - ஆனி 24 ஞாயிற்றுக்கிழமை
ஜூலை மாத கரி நாட்கள் :
ஜூலை 18 - ஆடி 02 செவ்வாய்கிழமை
ஜூலை 26 - ஆடி 10 புதன்கிழமை
ஜூலை மாத வாஸ்து நாள் :
ஜூலை 27 - ஆடி 11 வியாழக்கிழமை 2 நாழிகை
வாஸ்து செய்ய உகந்த நேரம் காலை 07.42 முதல் 08.18 வரை
ஜூலை மாத கிரிவலம்:
2.7.23 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.22 முதல் 3.7.23 திங்கட்கிழமை மாலை 5.08 வரை
