விருச்சிகம் ஜூன் மாத பொதுப்பலன் 2023:
இந்த மாதம் நீங்கள் வாழ்வின் பல அம்சங்களில் பின்னடவை சந்திப்பீர்கள். எனவே மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது மனச் சோர்வு வராமல் காத்துக் கொள்ள உங்களுக்கு உதவும். நீங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த மாதம் நீங்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் நிகழ்வுகள் உங்களை வலுவுள்ளவராக மாற்றும். உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும்.
காதல்/ குடும்ப உறவு :
உங்கள் வாழ்க்கைத் துணைவர் உங்களுக்கு ஆதரவாக செயல்படலாம். அவரது பாசமும் அக்கறையும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்களில் ஒரு சிலர் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சூரியன் பூஜை
நிதிநிலை:
உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் ஓரளவு சீராக இருக்கும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் கடன் வாங்க நேரலாம். அதே நேரம் அதிர்ஷ்டம் மூலம் நீங்கள் வருமானம் பெரும் வாய்ப்பும் உள்ளது. உங்களுக்காகவும், உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் தந்தைக்காகவும் பணத்தை செலவு செய்ய நேரலாம். நிதி மேலாண்மை கலையை இந்த மாதம் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
உத்தியோகம் :
உத்தியோகத்தில் முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும். என்றாலும் பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவீர்கள். என்றாலும் அளவு மீறாமல் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பாராத சில நிகழ்வுகளை பணியிடத்தில் சந்திக்க நேரும்.
தொழில்:
இந்த மாதம் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். நீங்கள் சாதுரியமாகச் செயல்படுவீர்கள். தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். இந்த மாதம் தொழிலில் நீங்கள் நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும். இந்த மாதத்தின் பிற்பகுதியில் குறிப்பாக ஆவணங்கள் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் பெண் தொழில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் மிதமான பலன்கள் கிட்டும். பங்குதாரர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். உங்களின் தொழில் வளர்ச்சிக்கு நீங்கள் நிபுணரை சந்திக்கும் வாய்ப்புகள் கிட்டும். உங்களின் பேச்சு தொழிலில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் கிரக நிலை உள்ளது. அதிக பணிகள் காரணமாக நீங்கள் மன அழுத்தத்தை சந்திக்க நேரலாம். இறை வழிபாடு மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
மாணவர்கள்:
இந்த மாதம் மாணவர்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிட்டும். எனவே மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய சூழலை நீங்கள் சந்திக்க வேண்டி வரலாம். அந்த சூழல் உங்களுக்கு பழகுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 23, 24, 25, 26 & 27.
அசுப தேதிகள் : 1, 2, 3, 4, 18, 19, 20, 28, 29 & 30.

Leave a Reply