தனுசு ஜூன் மாத பொதுப்பலன் 2023:
இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும் என்றாலும் குடும்பத்தில் சில பிரச்சினைகள் சந்திக்க நேரும். குழந்தைகளுடனும் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பிறரிடம் பேசும் போது நீங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்த மாதம் உங்கள் முயற்சிகள் மூலம் நற்பலன்களைப் பெறுவீர்கள். இந்த மாதம் செழிப்பான மாதமாக இருக்கும்.
காதல்/ குடும்ப உறவு:
கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி இருக்கும். என்றாலும் சில சமயங்களில் ஈகோ மோதல் ஏற்படும். காதலர்கள் தங்கள் உறவில் சில பின்னடைவைக் காணலாம். ஒரு சில காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்ற முயற்சிக்கலாம். உறவு மற்றும் குடும்பத்தில் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு இருக்கும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : புதன் பூஜை
நிதிநிலை:
உங்களின் பொருளாதார நிலை இந்த மாதம் சுமாராக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் பெறுவீர்கள். பங்கு சந்தை மற்றும் ஊக வணிகம் மூலம் வருமானம் வரலாம். வாங்கிய கடனை அடைத்து முடிப்பீர்கள். குழந்தைகள் சார்பாகவும் மருத்துவ சிகிச்சை செலவும் செய்ய வேண்டியிருக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை
உத்தியோகம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் மேலதிகாரி மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த மாதம் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிட்டும் வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக நீங்கள் பாடுபடுவீர்கள். உங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.
தொழில்:
உங்கள் தொழில் அல்லது வியாபாரம் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அதற்காக கடன் பெறுவீர்கள். என்றாலும் தொழில் மூலம் உங்களுக்கு லாபம் கிட்டும். தொழிலில் சில மாற்றங்களை நீங்கள் சந்திக்க நேரும். தொழிலில் போட்டியாளர்களை எளிதில் வெற்றி கொள்வீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
தனுசு ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் சிறப்பாகச் செயல்படுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நிலைமை சாதகமாக இருக்கக் காண்பார்கள். புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். பங்கு சந்தை மூலம் லாபம் கிட்டும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்பட நேரலாம். எதிர்பாராத விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை அவசியம். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ஆரோக்கியம் சீராகும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
மாணவர்கள்:
மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். என்றாலும் சிறு சிறு தடைகளைச் சந்திக்க நேரலாம். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி காண்பார்கள். மாணவர்கள் விளையாடும் போது தகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் மற்றும் இந்த மாதத்தில் வாகனம் ஓட்டுவதில் சாகசங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க : முருகர் பூஜை
சுப தேதிகள் : 1, 2, 9, 10, 11, 12, 13, 16, 17, 18, 19, 26, 27, 28 & 29.
அசுப தேதிகள் : 3, 4, 5, 6, 20, 21, 22 & 30.

Leave a Reply