துலாம் ஜூன் மாத பொதுப்பலன் 2023:
இந்த மாதம் குடும்பத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். மாத ஆரம்பத்தில் பிரச்சினைகளை சந்தித்தாலும் மாத பிற்பகுதியில் அதற்கான தீர்வுகளைக் காண்பீர்கள். குழந்தைகள் தொடர்பான கவலைகள் இந்த மாதம் உங்களுக்கு இருக்கலாம். தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வீர்கள்.
காதல் / குடும்ப உறவு :
உறவு நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிட்டும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இந்த மாதம் மனதளவிலான பாதிப்பு இருக்கும். இதனால் குடும்பத்தில் சில பிரச்சினைகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். என்றாலும் கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கேற்ற துணை கிடைக்க சற்று பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் காத்திருக்க வேண்டும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
நிதிநிலை:
பொருளாதார நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பான காலக்கட்டமாக இருக்கும். பங்கு சந்தை மற்றும் வர்த்தகம் மூலம் லாபம் மற்றும் ஆதாயம் கிட்டும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதன் மூலம் செலவு இருக்கும். தந்தையின் நலன் கருதியும் செலவுகளை மேற்கொள்வீர்கள். கையில் பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
உத்தியோகம்:
உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பல பிரகாசமான புதிய வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் நீங்கள் முக்கியத்துவம் பெறுவீர்கள். சிறப்பாகப் பணியாற்றி குறித்த நேரத்தில் பணிகளை முடித்து அளிப்பீர்கள். சக ஊழியர்கள் சிலரால் உங்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
தொழில்:
இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் மூலம் லாபமும் ஆதாயமும் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால் இந்த மாதம் அது நிறைவேறும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழில் மூலம் வருமானம் பெருகும். பங்குதாரர்களின் ஆதரவு உங்களுக்கு கிட்டும். தொழிலுக்காக அதிக நேரம் செலவிடுவீர்கள் மற்றும் உங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் தொழிலில் சிறப்பான நிலை காணப்படும். கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். மீண்டும் அது நடைபெறா வண்ணம் நடந்து கொள்வீர்கள். நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவர் என்றால் உங்கள் கூட்டாளி உங்களின் ஆதரவை நாடுவார்கள். உங்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை அவருக்கு தேவைப்படலாம்.
தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவீர்கள். மற்றபடி உங்கள் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும். என்றாலும் இந்த மாதத்தில் பெரிய உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்ற அச்சம் உங்களுக்கு இருக்கலாம். இருப்பினும், உடல்நலம் தொடர்பான விஷயங்களில் கவலைப்படுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. இந்த காலகட்டத்தில் மஜ்ஜை மற்றும் கண் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள்:
மாணவர்கள் இந்த மாதம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உங்கள் சிந்தனை செயல்பாட்டில் இடையூறுகளை நீங்கள் சந்தித்தாலும் உங்களுக்கு கவனச் சிதறல் வராத வண்ணம் காத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் விளையாட்டின் போதும், பயணத்தின் போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை
சுப தேதிகள் : 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 21, 22, 23, 24 & 25.
அசுப தேதிகள் : 1,2, 16, 17, 26, 27, 28 & 29.

Leave a Reply