AstroVed Menu
AstroVed
search
search

June Matha Viruchigam Rasi Palan

dateMay 19, 2020

விருச்சிகம்  ஜூன் மாத பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே! இது உங்களுக்கு ஒரு சுமாரான மாதமாகவே இருக்கும். குடும்பத்தில் நீங்கள் பலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பலன்கள் உங்களுக்குச் சாதகமாக அமைய, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, தொழிலும் சரி, சவால்கள் நிறைந்ததாகவே காணப்படும்.  வேலையில் உங்கள் கவனக்குறைவு காரணமாக நீங்கள் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். செய் தொழில் லாபங்களில் முடக்கம் ஏற்படலாம். மனைவி மூலம் செலவுகளும் ஏற்படக் கூடும். அனைத்து விஷயங்களிலும், இப்பொழுது நீங்கள் உறுதியாக இருப்பது அவசியம். இதன் மூலம், சோதனைகளுக்குப் பின் சாதனை செய்யும் காலமாக இதை நீங்கள் மாற்றிக் கொள்ள இயலும். இப்பொழுது சிலருக்குத் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

விருச்சிகம்  ஜூன் மாத காதல் மற்றும் திருமணவாழ்க்கை 

காதல் வாழ்க்கை சமபலன் உள்ளதாக இருக்கும். எனினும், திருமண உறவுகள் சிறப்பாகவும், மிக சந்தோஷம் நிறைந்ததாகவும் இருக்கும். ஆனால், உங்கள் துணைவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கை தேவை.    

விருச்சிகம்  ஜூன் மாத நிதி நிலை  

பணவரவு சுமாராக இருக்கும். ஆனால், தனிப்பட்ட தேவைகளுக்காக நீங்கள் அதிக செலவு செய்ய நேரிடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். இது தொடர்பாக மற்றவர்களுக்கு வாக்குறுதி எதையும் அளிக்க வேண்டாம். 

விருச்சிகம்  ஜூன் மாத வேலை 

வேலையில் அதிக கவனம் தேவை.. உங்கள் பொறுப்புகள் மேலும் அதிகரிக்கலாம். எனினும், கொடுக்கப்பட்ட கடமைகளை முழுமனதுடன், சரியாக நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம், சில தடைகளுக்கு பின்னர்,  நீங்கள் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். 

விருச்சிகம்  ஜூன் மாத தொழில்  

தொழிலில் சவால்கள் நிறைந்து காணப்படும். எனினும், உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலும், உங்களுக்கு பெரும் நன்மையைச் செய்யும். நீங்கள் தொழில் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். இதன் மூலம், நினைத்த இலக்குகளை எளிதாக அடையலாம்.  

விருச்சிகம் ஜூன் மாத தொழில் வல்லுநர் 

விருச்சிக ராசி தொழில் வல்லுநர்கள், இந்த மாதம், உணர்ச்சி வசத்தில் திடீரென்று மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக, பணியில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகலாம். ஆகவே இது, நீங்கள், ஒரு முகப்பட்ட மனதுடன், மிக கவனமாகப் பணியாற்ற வேண்டிய காலமாகும். இது, உங்கள் உற்பத்தித் திறன் மேம்பட்டு இருக்க உதவும்.  

விருச்சிகம் ஜூன் மாத ஆரோக்கியம் 

உங்கள் உடல் நிலை சுமாராக இருக்கும். சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, சத்தான உணவை உட்கொள்வது போன்றவற்றின் மூலம்,  நீங்கள் நல்ல ஆரோக்கியம் பெற முடியும். 

 விருச்சிகம் ஜூன் மாத மாணவர்கள் 

மாணவர்களுக்கு இது ஒரு சாதாரண காலமாகும். படிப்பில் வெற்றி பெற நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். கலாச்சார விழாக்கள் போன்றவற்றில் பங்கு கொள்வதன் மூலம், உங்கள் அறிவை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்கள் செயலாற்றல் பெற்றோர்களுக்குப் பெருமிதம் அளிக்கும். 

சுப தினங்கள் :    3,4,14,15,16,24,25,28,29
அசுப தினங்கள் : 17,18,22,23,30

பரிகாரம்

ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சனி, குரு, ராகு, கேதுவுக்கு பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
ஆஞ்சநேயர் கோவிலில் இனிப்பு தானம் செய்தல், பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.


banner

Leave a Reply