AstroVed Menu
AstroVed
search
search

June Matha Thulam Rasi Palan 2020

dateMay 19, 2020

துலாம்  ஜூன் மாத பொதுப்பலன்கள் :

துலாம் ராசி அன்பர்கள், இந்த மாதம், பெரும்பாலும், சாதகமான  பலன்களையே எதிர்பார்க்கலாம். தன வரவு நன்றாக இருக்கும். தொழில் துறையில், அதிக உழைப்பு, கடும் முயற்சி ஆகியவற்றின் துணையால், லாபங்களைப் பெறுவீர்கள். எனினும், இடையிடையே தொழில் சிறிது மந்தமாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. பணி இடத்தில், உயர்பதவிகள் உங்களைத் தேடி வரலாம். கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப வாழ்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். தகப்பனாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். எனினும், காதல் விவகாரங்களில் கவனம் தேவை. உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

துலாம்  ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். அவருடன் நீங்கள் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். தகவல் தொடர்பின் பயனாகவும், காலம் மகிழ்ச்சியாகக் கழியும். இந்த நேரத்தில், பொதுவாக, உங்கள் எல்லாச் செயல்களுக்கும் சரியான பலன் கிடைக்கும். 

துலாம் ஜூன் மாத நிதி :

நிதி நிலை சிறப்பாகக் காணப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில், தாயிடம் இருந்தும், நீங்கள் நிதி உதவி பெறலாம். உங்கள் செலவினங்களை நிங்கள் கவனமாகத் திட்டமிடுவது நல்லது. பிற செலவினங்களைக் குறைப்பதன் மூலம், கடன்களைக் கூட, உங்களால் இப்பொழுது தீர்க்க முடியும். 

துலாம் ஜூன் மாத வேலை :

இது, வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். உங்கள் பணியும், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமையும். அலுவலகத்தில்  உங்கள் மதிப்பை நிரூபிக்க, ஒரு நல்ல வாய்ப்பு, உங்களைத் தேடி வரும். 

துலாம் ஜூன் மாத தொழில் :

உங்கள் தைரியமான அணுகுமுறையும், சுதந்திர இயல்பும், உங்கள் தொழில் வளர்ச்சிக்கு, மிகவும் உறுதுணையாக இருக்கும். இப்பொழுது உங்கள் பணி எதுவாக இருந்தாலும் சரி, அதில் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள். 

துலாம் ஜூன் மாத தொழில் வல்லுநர் :

துலாம் ராசி தொழில் வல்லுநர்கள், இந்த மாதம், நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப, தங்கள் திட்டங்களை வடிவமைத்திட வேண்டும். இது, அவர்கள் சிறப்பான பலன்களை அடைய உதவும். உங்கள் பணிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, நன்கு செயலாற்ற உதவும்.    

துலாம் ஜூன் மாத ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எனினும், கண்டிப்பான உணவுக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதும், தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வதும், உங்கள் உடலைச் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும். .

துலாம் ஜூன் மாத மாணவர்கள் :

இந்த மாதம் கல்வி முன்னேற்றம் சாதாரணமாகவே காணப்படுகிறது. கடும் முயற்சிக்குப் பின்னரே, மாணவர்களுக்குப் பலன் கிடைக்கும் எனலாம். எனினும், கடுமையாக உழைத்து, உங்கள் பாடங்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவையும், நடைமுறை அறிவையும், இப்பொழுது நீங்கள் பெறுவீர்கள். 

சுப தினங்கள் :  12,13,22,23,26,27
அசுப தினங்கள் :  1,2,14,15,16,19,20,21,28,29

பரிகாரம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ நகராஜர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சுக்கிரன், சனி, குரு, ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
ஏழை, எளியோர், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் பொருளுதவி செய்தல். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.
 


banner

Leave a Reply