சிம்மம் ஜூன் மாத பொதுப்பலன் 2023:
பொதுப்பலன்:
இந்த மாதம் நீங்கள் வாழ்வில் வெற்றி காண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் உறவில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரும். குழந்தைகள் மீதான பாசம் அதிகரிக்கும். அலுவலகம் அல்லது தொழில் நிமித்தமாக நீங்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள நேரலாம். தூக்கமின்மை காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மற்றபடி ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்றாலும் சில போராட்டங்களை சந்திக்க நேரலாம்.
காதல்/ குடும்ப உறவு :
காதலர்கள் இந்த மாதம் கவனமுடன் இருக்க வேண்டும். காதல் உறவில் தோல்விகள் / முறிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.. உறவைப் பொறுத்தவரை இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே நல்லிணக்க உறவு பராமரிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் உணர்ச்சி வசப்பட நேரலாம். இதனால் உறவில் சிக்கல் ஏற்படலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை:
உங்கள் நிதிநிலை இந்த மாதம் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். உத்தியோகம் அல்லது தொழில் மூலம் வருமானம் மற்றும் லாபம் பெறலாம். பூர்வீகச் சொத்து கிடைக்கும். அதன் மூலம் அசையாச் சொத்து வாங்குதல் அல்லது பராமரித்தல் தொடர்பான செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் தாய் தந்தையர் நலன் கருதி செலவுகளை மேற்கொள்வீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
உத்தியோகம்:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை ஏற்றமான நிலை இருக்கும். நீங்கள் முன்னேற்றப் பாதையில் நடை போடுவீர்கள். உங்கள் வருமானம் உயரும். அலுவலகப் பணி நிமித்தமாக வெளியிடங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்கள். சக பணியாளர்களை நீங்கள் திறம்படக் கையாள்வீர்கள்.
தொழில்:
தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சோதனையான கட்டங்களைத் தாண்டி முன்னேற வேண்டியிருக்கும். வியாபார நெறி முறைகளில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து செயலப்டுவதன் மூலம் தொழிலில் வெற்றி காணலாம். வாடிக்கையாளர்களைக் கவர்வது சற்று கடினமான செயலாக இருக்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாக செயல்பட்டு தொழிலில் வெற்றி காண்பார்கள். உங்கள் முடிவெடுக்கும் திறன் தொழிலில் நல்ல பலனை அளிக்கும். தொழில் சார்ந்த பிறரின் ஒத்துழைப்புகள் உங்களுக்கு இந்த மாதம் எளிதாகக் கிடைக்கும். கூட்டுத் தொழில் மேற்கொள்ள எண்ணம் இருந்தால் அதனை சிறிது காலத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும்.
தொழிலில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை
ஆரோக்கியம்:
சிம்ம ராசிக்காரர்களின் ஆரோக்கியம் இந்த மாதத்தில் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். இருப்பினும், தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். இக்காலத்தில் தாய் தந்தையருக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் வரலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
மாணவர்கள்:
மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும் என்றாலும் சில போராட்டங்களை சந்திக்க நேரும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த மாதம் வெற்றி காண்பார்கள். கல்வி தொடர்பான விஷயங்கள் சிறப்பாக இருந்தாலும் நீங்கள் சில எதிரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை
சுப தேதிகள் : 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 16, 17, 18, 19, 28, 29 & 30.
அசுப தேதிகள் : 11, 12, 13, 20, 21, 22, 23, 24 & 25

Leave a Reply