AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

கன்னி ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Kanni Rasi Palan 2020

dateMay 18, 2020

கன்னி  ஜூன் மாத பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம், ஓரளவு மிதமான பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியிலும் சில ஆதாயங்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை சுமுகமாக இருக்கும். வேலை அல்லது தொழில் சாதாரணமாக நடைபெறும். செய்யும் தொழிலில், சிறு தடைகளுக்குப் பின் லாபங்கள் கிடைக்கும். சிலர் வாகனங்கள் வாங்க வாய்ப்பு உருவாகும். உங்கள் உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்படும். எனினும், கணவர் அல்லது மனைவி, மற்றும் தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. தந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால், இடையிடையே சிறிது கஷ்டங்களும் வந்து போகும். சிலருக்கு வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும். ஒரு சிலர், குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்களையும் மேற்கொள்ளலாம்.உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

 

கன்னி ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதலைப் பொறுத்தவரை, சூழ்நிலை மந்தமாகக் காணப்படும். காதலர்களுக்குள் மனக்கசப்பும் ஏற்படக் கூடும். எனினும், ஒரு சில காதல் உறவுகள், திருமணத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.  

கன்னி  ஜூன் மாத நிதி நிலை

பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானம். உங்கள் அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். தந்தை மற்றும் அரசாங்கம் மூலமாகவும், ஆதாயம் அல்லது லாபம் அடையும் வாய்ப்புள்ளது. எனவே, பணத்தைச் சேமிப்பதற்கான உங்களுடைய அனைத்து முயற்சிகளும், இப்பொழுது வெற்றி பெறும்.

கன்னி ஜூன் மாத வேலை 

இந்த மாதம், பொதுவாக நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் பணி புரிவீர்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் முறையான கவனம் செலுத்துவதும், தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும், மேலும் நன்மை தரும். எனினும், ஒரு சிலர், தங்கள் வேலையை இழக்கக்கூடிய நிலை உருவாகலாம். எச்சரிக்கையாக இருக்கவும். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, பொறுமையாகச் செயல்படுவது, உங்களுக்குத் துணை புரியும். 

 கன்னி ஜூன் மாத தொழில் 

தொழில் வகையில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். உங்கள் எண்ணங்களும், ஒரே சீராகச் செயல்படாமல் போகலாம். இவற்றின் காரணமாக, உங்கள் முன்னேற்றம் தடைபடலாம். அல்லது தாமதமாகலாம். எனினும், பொதுவாக, உங்கள் தைரியமான அணுகுமுறையும் சுதந்திர இயல்பும் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். 

கன்னி  ஜூன் மாத தொழில் வல்லுநர் 

கன்னி ராசி தொழில் வல்லுநர்களின் செயல்திறன், அவர்களுக்கு இந்த மாதம், நன்மையான பலன்களைப் பெற்றுத் தரக்கூடும். பணியிடத்தில் உங்கள் செயல்பாடு, உங்கள் திறமைகளை நன்கு வெளிப்படுத்தும் வகையில் அமையும். இது உங்களுக்கு, அதிக தன்னம்பிக்கையை அளிப்பதுடன், பதவி உயர்வு வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும். சிலருக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 

 கன்னி ஜூன் மாத ஆரோக்கியம் 

உங்கள் வெற்றி மற்றும் சந்தோஷம் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் அளிக்கும். இதன் மூலம், நீங்கள், மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். 

கன்னி  ஜூன் மாத மாணவர்கள் 

மாணவர்கள் நன்கு படிப்பதற்கு ஏற்ற நேரம் இது. இப்பொழுது அவர்கள், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பு உருவாகும். உங்கள் பரந்த மனப்பான்மை, உங்களது தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் செயல்பாடுகளும், கல்வித் திறனும், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும்.  

சுப தினங்கள் :    9,10,11,19,20,21,24,25
அசுப தினங்கள் : 12,13,17,18,26,27

பரிகாரம்

பகவான் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் மற்றும் துர்க்கை வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
புதன், சனி, குரு, ராகு, கேதுவுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
அநாதைக் குழந்தைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செய்தல். சித்தர் அல்லது குருவின் ஆலயங்களில் இனிப்பு தானம் செய்தல்.


banner

Leave a Reply