கடகம் ஜூன் மாத பொதுப்பலன் 2023:
இந்த மாதம் உங்கள் மனதில் பதட்டம் காணப்படலாம். நீங்கள் உணர்ச்சிவசப்பட நேரலாம். இதனால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம். என்றாலும் உங்கள் தாயார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். தொழிலில் சில மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள். கணவன் மனைவி இடையே சில வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. மாணவர்கள் வெற்றி பெற சில தடைகளைத் தாண்டி வர வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
காதல் / குடும்ப உறவு:
கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு இன்மை காரணமாக வாக்கு வாதங்கள் ஏற்படலாம். எனவே கருத்து வேறுபாடுகளைக் களைந்து புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்களின் அன்பும் அக்கறையும் உங்கள் வாழ்க்கைத் துணையால் புரிந்து கொள்ள இயலாமல் போகலாம். பொறுமை அவசியம். உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்ப அங்கத்தினர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்து மூலம் வருமானம் வரலாம். இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். அதன்மூலம் திடீர் லாபம், ஆதாயம் மற்றும் வருமானம் வரலாம். இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் முதலீடு நீண்ட காலத்திற்கு லாபத்தை அளிக்கும். மருத்துவ சிகிச்சைக்கான செலவை இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ள நேரும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை
உத்தியோகம் :
பணியிடத்தில் கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் வேலையில் தற்போதைய நிலையைத் தக்க வைத்துக் கொள்ள இயலும். பணியிடத்தில் உங்கள் நற்பெயரை கெடுக்கும் வகையில் சிலர் செயல்படலாம். எனவே கவனம் தேவை. உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டலாம். வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வழிகாட்டிகளின் / நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது நன்மை அளிக்கும்.
தொழில்:
இந்த மாதம் புதிய தொழில் தொடங்க நீங்கள் நாட்டம் கொள்வீர்கள். பிறரைக் கலந்து ஆலோசிக்காமல் சொந்தமாக செயல்பட விரும்புவீர்கள். தொழிலில் மாறுபடும் சூழ்நிலைகேற்ப உங்கள் தொழிலை நடத்த நீங்கள் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். வியாபரத்தை ஸ்திரப்படுத்தவும் சூழ்நிலையை சமாளிக்கவும் நீங்கள் சாதுரியமாகச் செயல்பட வேண்டும். கூட்டுத் தொழில் இந்த மாதம் நல்ல பலனை அளிக்காது.
தொழில் வல்லுனர்கள் :
தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் வரவேற்கத்தக்கதாக இருக்கும். நீங்கள் உங்கள் திறமைகளை பயன்படுத்தி செயலாற்றினால் வெற்றி பெறுவீர்கள். தொழில் புரியும் இடத்தில் சில கருத்து வேறுபாடுகளும் அதன் காரணமாக வாக்கு வாதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் பொறுமையுடன் அதனை சமாளிக்க வேண்டியிருக்கும். பெண் பணியாளர்கள் உங்களுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள்.
தொழிலில் மேன்மை பெற :அங்காரகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் தூக்கமின்மை காரணமாக உங்கள் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அலுவலகப் பணிகள் இரண்டையும் சமாளித்து செல்ல வேண்டும். நீங்கள் சாதுரியமாகச் செயல்படுவதன் மூலம் உங்கள் மன நிலையை காத்துக் கொள்ளலாம். அதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
மாணவர்கள் :
இந்த மாதம் மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும். கவனச் சிதறலுக்கு ஆளாக நேரலாம். தூக்கமின்மை காரணமாக நினைவாற்றல் பாதிக்கப்படலாம். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள.
கல்வியில் சிறந்து விளங்க : முருகர் பூஜை
சுப தேதிகள் : 1, 2, 5, 6, 7, 8, 14, 15, 16, 17, 26, 27, 28 & 29.
அசுப தேதிகள் : 9, 10,18, 19, 20, 21 & 22.

Leave a Reply