ரிஷப ராசி ஜூன் மாத பொதுப்பலன் 2023:
இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குறிப்பாக பொருளாதார முன்னேற்றம் குறித்து முயற்சி செய்வீர்கள். திருமண வாழ்க்கையை மேம்படுத்த நினைப்பீர்கள். பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்வீர்கள். குழந்தைகளிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவீர்கள். இது அவர்கள் மீதான உங்கள் அக்கறையை வெளிப்படுத்தும். உங்கள் பேச்சாற்றல் மேம்படும். இளைய சகோதரர்களுடனான உறவு சுமுகமாக இருக்க வாய்ப்பில்லை. இந்த மாதம் நீங்கள் வெளியிடப் பயணம் மேற்கொள்ள நேரலாம்.
காதல் / குடும்ப உறவு:
கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பீர்கள். என்றாலும் சில சமயங்களில் நீங்கள் உணர்ச்சி வசப்படக் கூடும். உங்கள் வாழ்க்கைத் துணை ஆதரவுடன் இந்த மாதம் நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு இந்த மாதம் கூடுதல் பொறுப்புகள் இருக்கலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் கணிசமான பணத்தை சேமிப்பீர்கள். கையில் பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்களுக்காகவும் உங்கள் தாயின் நலனுக்காகவும் நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். மருத்துவ சிகிச்சை சார்ந்த செலவுகளையும் இந்த மாதம் நீங்கள் சந்திக்க நேரலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகம்:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் மிதமான பலன்களைக் காண்பீர்கள். அலுவலகப் பணி நிமித்தமாக நீங்கள் வெளியிடங்களுக்கு செல்ல நேரலாம். பணியிடத்தில் வாக்குவாதம் செய்யும் சூழ்நிலை வரலாம். நீங்கள் சாதுரியமாகவும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு கை கொடுக்கும் என்றாலும் சக பணியாளர்கள் மூலம் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம்.
தொழில்:
உங்கள் வியாபாரம் அல்லது தொழில் சிறப்பாக நடக்க நீங்கள் புதுமையாக சிந்தித்து செயல்பட வேண்டியிருக்கும். தொழிலில் நீங்கள் சில நஷ்டங்களை சந்திக்க நேரலாம். அதன் மூலம் நீங்கள் பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். கூட்டுத் தொழில் மேற்கொண்டிருப்பவர்கள் தங்களின் கூட்டாளிக்கு ஆதரவாக செயல்படலாம். நீங்கள் வாங்கிய தொழில் குறித்த கடனை இந்த மாதம் அடைக்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
ரிஷப ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சிறந்த காலமாக இருக்கும். தொழில் அல்லது வியாபார சூழல் அனுகூலமாக இருக்கும். நீங்கள் சாதுரியமாக செயல்படுவதன் மூலம் வெற்றியின் உச்சத்தை தொடலாம். தொழிலில் உங்களின் புதிய முயற்சிகள் மூலம் நீங்கள் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் நீங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்பீர்கள்.
தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் உடல் சூடு, தூக்கமின்மை போன்ற சிறு சிறு பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை உங்களுக்கு இருக்கலாம். அதனால் நீங்கள் பதட்டமாக காணப்படலாம். சிறு அளவிலான மருத்துவ செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள்:
மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி பயில்வார்கள். என்றாலும் போதுமான தூக்கம் மேற்கொள்வதன் மூலம் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள இயலும். கவனத்திறன் மேம்படும். இந்த மாதம் பேச்சை விட செயலில் திறனை வெளிபடுத்த வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க :பிருகஸ்பதி பூஜை
சுப நாட்கள் : 1, 2, 3, 4, 9, 10, 11, 12, 21, 22, 23, 24, 25, 28, 29h & 30.
அசுப நாட்கள் : 5, 6, 13, 14, 15, 16 & 17.

Leave a Reply