AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் ஜூன் மாத ராசி பலன் 2023 | June Matha Mesham Rasi Palan 2023

dateMay 26, 2023

மேஷம் ஜூன் மாத பொதுப்பலன் 2023:

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில்  உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்பு உங்களிடம் காணப்படும். உங்கள் பேச்சாற்றல் மேம்படும் என்றாலும் நீங்கள் யாருடனும் வாக்கு வாதம் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்கள் பேச்சு பிறரை காயப்படுத்தாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

காதல் / குடும்ப உறவு: 

உறவு நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு இந்த மாதம் ஆதரவுக் கரம் நீட்டுவார். இது உங்கள் மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். என்றாலும் உங்கள் மனதில் விரக்தி மனப்பான்மை காணப்படலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : கணபதி பூஜை

நிதிநிலை:

உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கடன்களை அடைக்க உங்கள் சேமிப்பு கை கொடுக்கும். எதிர்கால பாதுகாப்பிற்காக நீங்கள் பணத்தை சேமிக்க எண்ணம் கொள்வீர்கள். அதற்காக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம். உங்கள் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவு செய்ய நேரலாம். இந்த மாதம் நீங்கள் அசையாச் சொத்து அல்லது வாகனம் வாங்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம்:

பணியிடச் சூழல் வரவேற்கத்தக்க வகையில் இருக்காது. நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். மேலும் பணியிடத்தில் நீங்கள் சில போராட்டங்களை சந்திக்க நேரலாம். அது உங்கள் கோபத்தை தூண்டலாம். என்றாலும் உத்தியோகம் மூலம் எதிர்பாராத வருமானம் கிட்டும். அலுவலகப் பணி நிமித்தமாக நீங்கள் குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ள நேரலாம். பணியிடத்தில் பெண் பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம்.  

தொழில் :

கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் இந்த மாதம் காணாமல் போகலாம். தொழிலில் நீங்கள் மீண்டு வருவீர்கள். அதில் ஒரு சாதகமான மாற்றத்தைக் காண்பீர்கள். தொழில் மூலம் நல்ல வருமானம் கிட்டும். நீங்கள் கூட்டுத் தொழில் மேற்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில் வல்லுனர்கள் :

இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் இந்த மாதம் தொழில் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு தொழில் நடத்துவீர்கள். தொழில் சார்ந்த குறுகிய மற்றும் நீண்ட தூர பயணங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்களின் சில முயற்சிகளில் நீங்கள் தோல்வியை சந்திக்க நேரலாம்.

உங்கள் தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை

ஆரோக்கியம் : 

அதிகமான பணிச்சுமை உங்களை சோர்வடையச் செய்யலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகப் பணி மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் நீங்கள் முக்கியுத்துவம் அளிக்க வேண்டும். மன ஆரோக்கியத்தை சார்ந்தே உடல் ஆரோக்கியம் இருக்கும் என்பதால் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :அங்காரகன் பூஜை

மாணவர்கள்:.

இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றாலும் நீங்கள் சில தடைகளை சந்திக்க நேரலாம். உங்கள் தன்னம்பிக்கை இந்த மாதம் வெளிப்படும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். கல்வி சார்ந்த குறுகிய பயணத்தை நீங்கள் மேற்கொள்ள நேரலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : முருகர் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 7, 8, 9, 10, 18, 19, 20, 21, 22, 26, 27, 28 & 29.

அசுப தேதிகள் : 3, 4, 11, 12, 13, 14, 15 & 30.


banner

Leave a Reply