மிதுனம் ஜூன் மாத பொதுப்பலன் 2023:
குடும்பத்தில் சில பிரச்சினைகள் காணப்படும். குறிப்பாக தந்தை தொடர்பாக இருக்கலாம். இந்த மாதம் நீங்கள் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் வேலைக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். ஒரு சிலர் கடன் பிரச்சினை குறித்து கவலைப்பட நேரலாம். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
காதல் / குடும்ப உறவு :
குடும்ப உறவில் பிணைப்பும் பாசமும் இருந்தாலும் சில சண்டை சச்சரவுகள் தவிர்க்க இயலாததாக இருக்கும். கணவன் மனைவி உறவை சீர் குலைக்கும் வகையில் சிலர் நடந்து கொள்ளலாம். இதனால் ஒற்றுமையான வாழ்வில் சில இடையூறுகள் ஏற்படலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
நிதிநிலை:
உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மேலும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அதிர்ஷ்டமும் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். பூர்வீக சொத்து கிட்டும் வாய்ப்புகள் இந்த மாதம் அதிகம் உள்ளது. அதன் மூலம் நீங்கள் உங்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக பணத்தை சேமிக்கலாம். தொழில் மூலமும் வருமானம் வரலாம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் மூலம் உங்கள் பொருளாதார நிலை மேம்படலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
உத்தியோகம் :
இந்த மாதம் நீங்கள் உத்தியோகத்தில் வளரச்சி மற்றும் முன்னேற்றம் காணலாம். என்றாலும் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாடு சென்று வேலை செய்ய நினைக்கும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் அந்த எண்ணத்தை கை விடுவதன் மூலம் இழப்புகளை தவிர்க்க இயலும். பணியிடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள்.
தொழில்:
இந்த மாதம் நீங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் உங்களை நாடி வருவதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். அவர்கள் மூலம் நீங்கள் லாபமும் ஆதாயமும் பெறுவீர்கள். இந்த மாத இறுதியில் உங்கள் வருமானம் உயரும். கூட்டுத் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிட்டும். வியாபாரத்தில் இந்த மாதம் உங்கள் திறமை வெளிப்படும்.
தொழில் நிபுணர்கள்:
இந்த மாதம் நீங்கள் தொழில் குறித்த புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வளர்ச்சி காண்பீர்கள். தொழிலில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் பேச்சாற்றல் மூலம் வியாபரத்தை விரிவு படுத்துவீர்கள். அயல்நாடு வாழ் வாடிக்கையாளர்கள் மற்றும் பிற மொழி பேசுபவர்கள் மூலம் தொழிலில் லாபமும் ஆதாயமும் பெறுவீர்கள்
தொழிலில் சிறந்து விளங்க : புதன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் தொண்டை காது மூக்கு தொடர்பான சிறு சிறு பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்பட நேரலாம். உடல் சூடு அதிகரிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள் :
இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம். மாணவர்களின் சிந்தனை சிறப்பாக இருக்கும். பிறரிடம் பேசும் போது பேச்சில் கவனம் தேவை. இந்த மாதம் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். எனவே கவனம் தேவை.
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 3, 4, 5, 6, 11, 12, 13, 14, 15, 23, 24, 25, 26, 27 & 30.
அசுப தேதிகள் : 7, 8, 16, 17, 18, 19 & 20.

Leave a Reply