AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் ஜூன் மாத ராசி பலன் 2022 | June Matha Rishabam Rasi Palan 2022

dateMay 2, 2022

ரிஷப ராசி ஜூன் மாத பொதுப்பலன்:

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்களின்  தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் கடினமான காலங்களைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் வியாபாரத்திலும் வேலையிலும் நஷ்டம் ஏற்படலாம். மேலும் உங்களின் அத்தியாவசியத் திட்டங்கள் மற்றும் முயற்சிகள் தாமதமாகலாம். உங்களின் திட்டமிடலும், நீங்கள் விரும்பிய பலனைத் தராமல் போகலாம். மேலும் நீண்ட பயணங்களில் தடைகள் இருக்கலாம்.  அதேசமயம் சிலர் வெளிநாடுகளில் வெற்றி பெற முடியாமல் போகலாம். இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்காது. மேலும், நண்பர்கள் உங்களுக்கு சில பிரச்சனைகளை தரலாம். மேலும் சிலர் தங்கள் தொழிலில் பின்னடைவை சந்திக்க நேரிடும். கூடுதலாக, மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற திட்டமிடும்  மாணவர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். பொதுவாக, உங்கள் விருப்பங்களும் அபிலாஷைகளும் இந்த மாதம்  நிறைவேறாமல் போகலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

குடும்பத்துடனான உறவு நன்றாக இருக்கும். மேலும் அவர்கள் உங்களுக்கு மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடினமான காலங்களில் ஆதரவளிப்பார்கள். இருப்பினும், உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவுகள் கடினமாக இருக்கலாம். உங்கள் காதல் வாழ்க்கையும் சண்டைகள், தவறான புரிதல்கள் மற்றும் பிரிவினைகள் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். அதே சமயம் சிலர் மனவேதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலால் பாதிக்கப்படலாம்.
உங்கள் திருமண வாழ்க்கை கண்ணியமாக இருக்கும். இல்லற வாழ்வில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், ஜூன் 2022 இல் பெரும்பாலான நேரங்களில் அமைதி நிலவும். புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம். மேலும் சிலர் அயல்நாடுகளுக்குச்  செல்லலாம். இருப்பினும், இந்த விஷயத்தில் நீங்கள் சில மாற்றங்களையும் சமரசங்களையும் செய்ய வேண்டியிருக்கும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண: லட்சுமி பூஜை

நிதி நிலை :- 

இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை சீராக இருக்காது. சிலருக்கு கடன் தொல்லைகள் ஏற்படலாம், கடன் விஷயங்களில் பிரச்சனைகள் வரலாம். பொருளாதார நிலைமைகள் ஏற்ற இறக்கமாக இருக்கலாம். சிலர் பணப்புழக்கம் குறைவாக இருக்கும் காரணத்தால் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம்.  சிலர் ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் விவசாயம் தொடர்பான வேலைகள் மூலம் மிதமான லாபம் பெறலாம். இருப்பினும், உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் நீங்கள் பணத்தை சேமிக்க முடியாது

உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை

உத்தியோகம் :

ரிஷப ராசிக்காரர்கள் ஜூன் 2022 இல் தங்கள் உத்தியோகத்தில்  தடைகளையும் பின்னடைவுகளையும் சந்திக்க நேரிடலாம். சிலர் தங்கள் அந்தஸ்து அல்லது வேலையை இழக்க நேரிடலாம். மேலும் உங்கள் தொழிலில் மரியாதை மற்றும் பதவி இழப்பு ஏற்படலாம். இருப்பினும், வேலையில்லாதவர்கள் புதிய வேலைகளைப் பெறலாம்; இருப்பினும், வருமானம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இருக்காது. உங்கள் கலை மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் தோல்விகளை சந்திக்க நேரிடலாம். உங்களின் வாழ்க்கையில் சாதகமான வாய்ப்புகள் அல்லது விரும்பிய மாற்றங்களை நீங்கள் பெற இயலாது. ஒரு சிலர் சில லாபகரமான வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். டிவி அல்லது ரேடியோ துறையில் பணிபுரிபவர்கள் ஜூன் 2022 இல் அங்கீகாரத்தையும் நல்ல தொகையையும் பெறலாம்.

உங்கள் உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை

தொழில் :-

மருத்துவம் மற்றும் அழகு சாதனத் தொழில்கள் உங்களுக்கு குறைந்த லாபத்தைத் தரும். அதேசமயம் ஆடைத் தொழில்கள் மிதமான லாபத்தைத் தரக்கூடும். தவிர, ஊகச் செயல்பாடுகள் மற்றும் உங்கள் முதலீடுகளால் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், பயணம், ஹோட்டல் மற்றும் உணவு வணிகம் மூலம் ஆதாயங்கள் இருக்கலாம். ஆனால், ஜூன் 2022ல் நிலக்கரி, எண்ணெய், போக்குவரத்து மற்றும் கட்டுமானம் தொடர்பான தொழில்களில் தாமதங்கள் மற்றும் தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். இருப்பினும், மீடியா  துறை தொடர்பான வேலை அல்லது வணிகம் கடின உழைப்புக்குப் பிறகு சில அங்கீகாரத்தைப் பெற்றுத் தரலாம்.

உங்கள் தொழிலில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை

தொழில் வல்லுனர்கள் :- 

அரசாங்க வேலைகளில் உங்களின் பதவி உயர்வு அல்லது ஊதிய  உயர்வுகள் தாமதமாகலாம். அதேசமயம் சிலர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் பெறலாம். இருப்பினும், பணியிடத்தில் ஏற்படும் மாற்றம் ஓரளவு லாபத்தை அளிக்கும். மேலும், விளம்பரம் அல்லது மார்க்கெட்டிங்கில் இருப்பவர்கள் ஜூன் 2022 இல் போராட்டம் மற்றும் ஆரம்ப பின்னடைவுகளுக்குப் பிறகு வெற்றியைக் காணலாம். ஆனால் விளையாட்டுத் துறைகளில் ஏற்படும் தோல்வி உங்களுக்கு கடினமான நேரத்தைத் தரக்கூடும். இருப்பினும், மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் இருப்பவர்கள் தங்கள் தொழிலில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஆரோக்கியம்:-

ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாகவே காணப்படும். ஆனால் சிலருக்கு ஜூன் 2022 இல் குறைந்த ஆற்றல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். தோல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வைரஸ் காய்ச்சலையும் நீங்கள் சந்திக்கலாம். இருப்பினும், நீங்கள் விரைவில் குணமடையலாம், ஆனால் உங்கள் சலிப்பூட்டும்  வழக்கமான வாழ்க்கை உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். கூடுதலாக, ஜூன் 2022 இல் சில உணர்ச்சிப் பிரச்சனைகள் உங்கள் அமைதியையும் உறக்கத்தையும் சீர்குலைக்கலாம். இருப்பினும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் தியானம் இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சிறிது தளர்வையும் மன உறுதியையும் கொண்டு வரலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : செவ்வாய் பூஜை

மாணவர்கள் :- 

ரிஷபம் ராசி மாணவர்கள் தங்கள் கல்வி விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மீடியா மற்றும் மேலாண்மை படிப்பில் உள்ளவர்கள் வெற்றி பெறலாம். ஆனால், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் தோல்விகள் மற்றும் தடைகளால் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தவிர, உயர்கல்வியில் இருப்பவர்கள் அல்லது வெளிநாடுகளில் படிக்கத் திட்டமிடுபவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் சில மாணவர்கள் தங்கள் உயர் கல்வி அல்லது ஆராய்ச்சி துறையில் உதவித்தொகை பெறலாம்.

உங்கள் கல்வியில் மேன்மை பெற :  கணபதி பூஜை

சுப நாட்கள் :- 5,6,10,11,14,18,21,22,30
அசுப நாட்கள் :  1,3, 4,8,9,12,13,15,19,20,23,24,29,30


banner

Leave a Reply