எல்லோருக்கும் பிடித்த கடவுள் விநாயகர் என்றால் அது மிகை ஆகாது. முழுமுதற் கடவுள் விநாயகரை தினந்தோறும் வணங்குவது சிறப்பு. அதிலும் புதன் கிழமைகளில் வணங்குவது மிகவும் சிறப்பு.
விக்னம் என்று கூறப்படும் தடைகளை உடைத்தெறியும் வல்லமை மிக்கவர் விநாயகர். நமது வாழ்வில் நமது முன்னேற்றத்தில் ஏற்படும் தடைகளை நாம் விநாயகர் அருளால் தகர்த்தெறியலாம்.
சங்கடங்களை நீக்கும் கடவுளும் விநாயகரே ஆவார்.வாழ்வில் சங்கடங்கள் இல்லாதவர்களே இல்லை எனலாம். திருமணம் ஆகவில்லை, திருமணத் தாமதங்கள், குழந்தைபேறு இன்மை, வேலை இன்மை, வேலையில் முன்னேற்றம் இன்மை, வறுமை, நோய் நொடிகள், வீட்டில் சண்டை சச்சரவுகள் இப்படி ஏதாவது ஒரு வகையில் நாம் அன்றாடம் சங்கடங்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இந்த சங்கடங்கள் தீர விநாயகரை புதன்கிழமை அன்று வழிபடுவது மிகச் சிறப்பானது ஆகும். விநாயகர் படம் அல்லது விநாயகர் விக்கிரகம் முன் கோலமிட்டு விளக்கேற்றி, ஒரு ரூபாய் நாணயத்தை அவர் முன் வைத்து கீழே உள்ள ஸ்லோகத்தைக் கூறி, அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வணங்கி வழிபட வேண்டும். விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டையை நைவேத்தியம் செய்யலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று விநாயகரை வழிபாட்டு விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கலாம். இப்படி தொடர்ந்து செய்து வர உங்கள் சங்கடங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல விலகும்.
கணேஷ ஸ்தோத்திரம் :
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கெளரீ புத்ரம் விநாயகம்
பக்தா வாஸம் ஸ்மரேந் நித்யாமயு : காமாத்த ஸித்தயே
ப்ரதமம் வக்ர துண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
ஸம்போ தரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமே வச
ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
நவமம் பால சந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
த்வாதஸைதானிநாமானித்ரி ஸந்த்யம்ய : படேந்நர
நச விக்னபயம் தஸ்ய ஸர்வஸித்திகரம் ப்ரபோ :
வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தி லபதே தனம்
புத்ராத்தீ லபதே புத்ரான் மோக்ஷர்த்தீ லபதே கதிம்
ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை பலம்லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய
அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வாய : ஸமர்ப்யேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேஸஸ்ய ப்ரஸாதத
ஸம்பூர்ணம்

Leave a Reply