AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் ராசி பலன் ஜனவரி 2021 | January Month Rishabam Rasi Palan 2021

dateDecember 4, 2020

ரிஷப ஜனவரி மாத 2021 ராசி பலன்:

பொதுப் பலன்கள் : ரிஷப ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த மாதம் மற்றும் வரும் மாதங்களில் நல்ல பலன்கள் கிட்டும்.   இந்த  மாதம் உங்கள் வாழ்க்கைப் பயணம் முன்னேற்றப் பாதையில்  பயணிக்கும் என்றால் மிகை ஆகாது. பணம், வேலை மற்றும் உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் மனதுள்  ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.  நீங்கள் இறை பக்தியை வளர்த்துக் கொள்வதாலும், மூதாதையர்களை வணங்குவதன் மூலமும் வாழ்வில் பல நன்மைகளைப்  பெறுவீர்கள். இந்த மாதம் நீங்கள்  வாழ்வின் சாரத்தையும் ஆன்மீக அவசியத்தையும் உணர்ந்து கொள்வீர்கள். ரிஷப ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

வேலை : பணியில் இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே!  இந்த மாதம் தங்களுக்கு சிறந்த மாதமாக இருக்கக் காண்பீர்கள். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். உங்கள் கடின உழைப்பு மேலதிகாரிகளின்  அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும்.   பணி நிமித்தமான உங்கள் பயணங்கள் மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.  தொழிலைக் குறிக்கும் கிரகமான சனி நற்பலன் தரும் குரு மற்றும் பெயர், புகழ் அளிக்கும் சூரியனுடன் இணைந்து உள்ளது. இந்த கிரக அமைவு உங்களை வாழ்வின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.  உங்கள் மதிப்பும் மரியாதையும் படிப்படியாக உயரும். 

காதல் உறவு : காதல் புரியும் ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் உறவில் சுமுக நிலை காண்பது அரிது. மனதுள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் மட்டுமே நல்லுறவு பராமரிக்க இயலும்.

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை : இந்த மாதம் உங்கள் கையில் பணம் புரளும். உங்கள் செலவுகளை கட்டுபடுத்திக் கொண்டு சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் லாபமும் காண்பீர்கள். என்றாலும் கவனம் தேவை. ஆபத்தான முதலீடுகளில்  சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. 

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மிபூஜை 

ஆரோக்கியம் : ரிஷப ராசி அன்பர்களுக்கு  இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதட்ட நிலை இருக்கும். முறையான  உணவு, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும். உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் உங்கள் பிறப்பு உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள் 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : ருத்ர பூஜை 

தொழில் : கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசி அன்பர்களே!  இந்த மாதம் நீங்கள் உங்கள் தங்கள் தொழிலில் அதிக  லாபம் காண்பீர்கள் என்றாலும் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.  தொழில் தொடர்பான உங்கள் பயணங்கள்  சிறந்த லாபம் மற்றும் வெற்றி அளிக்கும். நீங்கள் தொழிலை விரிவுபடுத்தி வெற்றி காண்பீர்கள். நீங்கள் பயணங்களை மேற்கொண்டு உங்கள் தொழில் மற்றும் கூட்டாளிகளை விரிவுபடுத்துவதன் மூலம் வெற்றி காணலாம். உங்கள் கோபம் மற்றும் உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் லாபமும் வளர்ச்சியும் பெறலாம்.

தொழில் வல்லுனர்கள் :  தொழில் வல்லுனர்கள் தங்கள் தொழிலில் தேக்க நிலை காண்பார்கள். வளர்ச்சி தடைபடும். உங்கள் மேலதிகாரிகள் மற்றும் உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள். என்றாலும் கிரக நிலை காரணமாக உங்களுக்கு பணியிடத்தில் திடீரென்று ஆதாயம் கிடைக்கும். சில மேலதிகாரிகள் மூலமும் ஆதாயம் கிட்டும். உங்கள் தொழிலில் நீங்கள் வியத்தகு மாற்றங்களைக் காண்பீர்கள். நீங்கள் தொழிலில் முதன்மை வகிப்பீர்கள்.

வேலையில் முன்னேற்றம் காண : குரு பூஜை 

மாணவர்கள் : ரிஷப ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் சவாலான நேரமாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனம் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.  நீங்கள் அதிக கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் சிறந்த முறையில் வெற்றி காண்பீர்கள். பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் அனுகூலமான மாதமாக இருக்கும்.  சாதகமான கிரகநிலைகள் இருப்பதன் காரணமாக பல பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

கல்வியில் மேன்மை பெற : புதன் பூஜை 

சுப நாட்கள்: 4, 5, 6,7, 15, 16, 17, 18, 19, 20, 23, 26, 27, 28, 29, 30.
அசுப நாட்கள் : 1,2,3, 8, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 24, 25, 31


banner

Leave a Reply