மேஷம் ராசி பலன் ஜனவரி 2021 | January Month Mesham Rasi Palan 2021

மேஷ ராசி ஜனவரி 2021 மாத ராசி பலன்
பொதுப் பலன்கள் : அனுபவங்களை வாழ்க்கைப் பாடங்களாக மேற்கொண்டு மனதில் ஒரு பக்குவ நிலையை வளர்த்துக் கொள்ளும் மாதமாக இந்த மாதம் இருக்கும். இந்த மாத கிரக அமைப்பு உங்கள் வாழ்வில் மிகச் சிறந்த தாக்கங்களை ஏற்படுத்தும். கிரகங்களில் சுப கிரகம் என்று அழைக்கபப்டும் குரு பகவான் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார். உங்கள் வேலை மற்றும் செல்வநிலையில் சிறந்த மாற்றம் காணும் மாதமாக இந்த மாதம் இருக்கும். மேஷ ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்
வேலை: இந்த மாதம் நீங்கள் கடினமாகவும் எறும்பு போல சுறுசுறுப்பாகவும் வேலை செய்வீர்கள். உங்களின் இந்த கடின உழைப்பு உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் ஏற்றத்தைக் கொண்டு சேர்க்கும். வேலை காரணமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்ள நேரும். அதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றி உங்கள் இலக்குகளை அடைவீர்கள். வேலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள்.
காதல் உறவு : இளம் வயதில் இருக்கும் மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் காதல் உறவு இனிமையாக இருக்கக் காண்பார்கள். திருமணமான தம்பதியர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் கருத்து ஒற்றுமையுடன் இல்லறம் நடத்துவார்கள். மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். குழந்தைகளுடனும் நல்லுறவு மேம்படும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை
நிதிநிலை : உங்கள் வேலையில் காணப்படும் வளார்ச்சி மற்றும் முன்னேற்றம் உங்கள் பொருளாதார நிலையை ஏற்றம் பெறச் செய்ய உதவும். உங்கள் கடின உழைப்பின் மூலம் நீங்கள் உங்கள் நிதிநிலையை மேம்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் மேற்கொண்டிருக்கும் தொழிலையும் சிறப்பாகச் செய்து அதன் மூலமும் உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் நிதிநிலையை மேம்படுத்திக் கொள்வீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : குபேர பூஜை
ஆரோக்கியம் : உங்கள் தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களின் இந்த சீரான ஆரோக்கிய நிலையை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தல், மனதை அமைதியாக வைத்திருக்க தியானம் மேற்கொள்ளல் போன்றவற்றை நீங்கள் பின்பற்றி உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரக பூஜை
தொழில் : தொழில் செய்யும் மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் தொழில் சிறப்பாக இருக்கும் அதிலும் குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் என்றால் சாதாரணமாகவே கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு நீங்கள் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டும். உங்கள் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டாலும் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிட்டும். வெளிநாட்டு கூட்டுத் தொழில் வாய்ப்பு கிட்டும். என்றாலும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் போது நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். பணிவுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தொழில் வல்லுனர்கள் : இந்த மாதம் நீங்கள் உங்கள் மனதில் அதிக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது.. நீங்கள் சிறப்பாக செயலாற்றி உங்கள் லட்சியத்தை அடைய தன்னம்பிக்கை ஒன்று தான் இந்த மாதம் உங்களுக்கு துணை நிற்கும். தொழில் தொடர்பான பயணங்களில் சில ஏமாற்றங்களை நீங்கள் சந்திக்க நேரும். இந்த மாதம் நீங்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆத்ம சக்தியை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டிய மாதம் இது.
வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை
மாணவர்கள் : கல்வி பயிலும் மேஷ ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கும். நீங்கள் மனதில் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். உங்கள் கவனிப்புத் திறன் ஞாபக சக்தி கூடும். மொத்தத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மேஷ ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயின்று முன்னேற்றம் காண்பார்கள்.
கல்வியில் மேன்மை பெற : ஆஞ்சநேயர் பூஜை
சுப நாட்கள் : 4, 5, 6, 7,14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29
அசுப நாட்கள் : 1,2,3, 8, 9, 10, 11, 12, 13, 23, 30, 31
