மிதுனம் ராசி பலன் ஜனவரி 2021 | January Month Mithunam Rasi Palan 2021

மிதுனம் ஜனவரி மாத 2021 ராசி பலன்:
பொதுப் பலன்கள் : இந்த ஆண்டின் தொடக்கம் உங்கள் தனிப்பட்ட வாழ்வு மற்றும் தொழில் இரண்டிலும் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். மௌனத்தை விட சிறந்த மொழி எதுவும் இல்லை. அதன் மூலம் பல பிரச்சினைகளைத் தவிர்க்க இயலும். எனவே எந்த காரணத்தைக் கொண்டும் மேலதிகாரிகள், வாழ்க்கைத் துணை, நண்பர்கள் ஆகியோருடன் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்து விடுங்கள். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் பல பிரச்சினைகளை நீங்கள் தவிர்க்க இயலும். எனவே கவனமுடன் செயல்படுங்கள். மிதுன ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
வேலை: இந்த மாதம் காணப்படும் கிரக நிலை பணியிடத்தில் சில சச்சரவுகளை ஏற்படுத்தும் என்பதால் உங்கள் பேச்சில் கவனம் தேவை. பல புதிய பணி வாய்ப்புகள் உங்களை நாடி வரும் என்றாலும் அவற்றை ஏற்பதற்கு முன் நிலுவையில் இருக்கும் பணிகளை முதலில் முடிக்க வேண்டும். பணியிடத்தில் நீங்கள் சில போராட்டங்களை சந்திப்பீர்கள். உங்கள் பேச்சு மேலதிகாரிகளுடன் சர்ச்சையை ஏற்படுத்தும்.
காதல் உறவு : இளம் வயது மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்களின் காதல் உறவு இனிமை மிக்கதாக இருக்கக் காண்பார்கள். நீங்கள் பணி புரியும் இடத்தில் உங்கள் மனதிற்கு ஏற்ற நபரை உங்களால் இனம் காண முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் சந்திக்கும் காலமாகக் கூட இந்த மாதம் அமையும். நீங்கள் காதலில் துணிவுடன் முடிவுகளை எடுப்பீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெருக : சுக்கிரன் பூஜை
நிதிநிலை : இந்த வருடம் நீங்கள் சிறப்பாக பணத்தை ஈட்டுவீர்கள் என்றாலும் வருட ஆரம்பத்தில் நீங்கள் விரும்பும் வகையில் பணம் சேர்க்க இயலாது. அதிக செலவுகள் காரணமாக இந்த மாதம் உங்கள் கையிருப்பு கரையும். எதிர் வரும் மாதங்களில் தான் நீங்கள் செல்வத்தை சேர்க்க இயலும். பணம் சம்பந்தமான எந்தவொரு முடிவுகளை எடுத்தாலும் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மறைமுக வகையில் உங்களுக்கு வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப உறுப்பினர் மூலம் செல்வம் வந்து சேரும். நீங்கள் பேராசைப் படாமல் அமைதியாக அதனை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். இந்த சமயத்தில் மனதில் ஈகோவை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை
ஆரோக்கியம் : ஆரோக்கியமான தேகத்திற்கு ஆரோக்கியமான மனம் தேவை. உங்களைச் சூழ்ந்து காணப்படும் பிரச்சினை மனதில் பதட்டத்தை ஏற்படுத்தும். அதன் விளைவாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றாலும் கவலைப்படும் அளவிற்கு பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. பணி சம்பந்தமான நெருக்கடிகள் குறையும் என்றாலும் படபடப்பு மற்றும் தலை வலி உங்களை பாதிக்கும். பதட்டப்படாமல் இருக்க யோகா பயிற்சி செய்யுங்கள். சரிவிகித உணவை உண்ணுங்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : ருத்ரன் பூஜை
தொழில் : கூட்டுத் தொழில் மேற்கொள்ளும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் சற்று பின்னடைவை சந்திக்க நேரும். உங்கள் இலக்குகளை எட்டுவது குதிரைக் கொம்பாக இருக்கும். பல தொழில் வாய்ப்புகள் உங்களை நாடி வரும். குறிப்பாக கூட்டுத் தொழில் வாய்ப்புகள். தொழில் கூட்டாளிகளை நீங்கள் கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களைப் பற்றி ஆராயாமல் தொழில் செய்ய இறங்குவது பின்னாளில் உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தொழில் வல்லுனர்கள் : மிதுன ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்றாலும் சில பிரச்சினைகள் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அச்சுத் தொழில், கணக்கியல் மற்றும் ஐடி துறையில் உள்ளவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். இந்த மாதம் பணிகள் அதிகம் வந்து குவியும். நிறைய பணிகள் நிலுவையில் இருக்கும். எனவே குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முயலுங்கள். நேரத்தை சரியாக நிர்வகித்து அதன்படி வேலைகளை முடிப்பதன் மூலம் உங்களால் ஆக்கப் பூர்வமாகச் செயல்பட இயலும். உங்களின் இந்தச் செயல் மேலதிகாரிகளின் கவனத்தையும் ஈர்க்கும்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை
மாணவர்கள் : மிதுன ராசியைச் சேர்ந்த மாணவர்கள் மனதில் இந்த மாதம் பதட்டம் நிறைந்து இருக்கும். எனவே நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சில காலம் பொறுத்திருக்க வேண்டும். கடுமையாக உழைத்துப் படிப்பதன் மூலம் உங்கள் எதிர்காலம் வளமாக இருக்கும்.
கல்வியில் மேன்மை பெற : சனி பூஜை
சுப நாட்கள்: 6, 7, 13, 14, 16, 17, 18, 19, 26, 27, 28,
அசுப நாட்கள் : 1,2,3,4,5 8, 9, 10, 11, 12, 15, 20 21, 22, 23, 24, 29, 30, 31
