AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

கும்பம் ராசி பலன் ஜனவரி 2020 | Kumbam Rasi Palan January 2020 in Tamil

dateDecember 31, 2019

பொது பலன்கள் :


கும்ப ராசி அன்பர்களே ! இந்த மாதம் உங்களுக்கு உற்றார் உறவினர் நண்பர்கள், என அனைவரும் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். அவர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக உங்கள் இளைய  சகோதரர் மூலம் நீங்கள் நன்மை அடைவீர்கள். மனைவியின் மூலம்  உங்களுக்கு லாபம் கிட்டும். நிதி நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். புதிய சொத்து சுகம் சேர்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வண்டி வாகன யோகம் ஏற்படும். பண வரவு சிறப்பாக அமைந்து உங்கள் கையில் பணம் புரளும். என்ற போதிலும் செலவு விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் செலவுகள் அல்லது தேவையில்லாத செலவுகள் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். அதே சமயத்தில் கையில் இருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும். புதிய முதலீடுகள் உங்களுக்கு இந்த மாதம் லாபம் அளிக்காது என்பதால் அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை நீங்கள் காட்டும் அக்கறையைப் பொறுத்து உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். எனவே உங்கள் ஆரோக்கியம் மட்டுமன்றி உங்கள் பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் கவனம் செலுத்துவதன் மூலம் மருத்துவச் செலவுகளை தவிர்க்க இயலும். யாரையும் நம்பி ஜாமீன் போன்றவற்றில் கையெழுத்து போடுவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்கும் என்பதால் நீங்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!


காதல் மற்றும் திருமண உறவுகள் :


இந்த மாதம் காதலர்களுக்கு காதல் உறவு கற்கண்டாய் இனிக்கா விட்டாலும் உறவு முறை சுமாராக இருக்கும். என்றாலும் உறவில் முரண்பாடு  ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் நீங்கள் பொறுமை காக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எனவே நீங்கள் வேகத்துடன் செயல்படுவதைவிட விவேகத்துடன் செயல்படுவது நல்லது.  


நிதி : 

வரவு பத்தணா செலவு எட்டணா என்ற நிலை இல்லாமல் வரவுக்கேற்ற செலவு இருக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். சிலருக்கு  இந்த மாதம் நீங்கள் மருத்துவச் செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் சொத்தை விற்று பணமாக்க நீங்கள் எடுக்கும் முயற்சி உங்களுக்கு வெற்றியை அளிக்கும். 

வேலை : 

தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல இந்த மாதம் உங்கள் மனதிற்கு பிடித்த வேலைகள் வந்து சேரும். மனதிற்கு பிடித்த வேலை என்ற காரணம் உங்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். உங்கள் சுறுசுறுப்பு காரணமாக வேலையில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். இப்படி சங்கிலித் தொடர் போல பணியில் நீங்கள் சிறந்து விளங்க ஏதுவாக இந்த மாதம் இருக்கும் என்ற போதிலும் உங்கள் திறமையை சோதிக்கும் வகையில் சில பணிகள் உங்களுக்கு வழங்கப்படும். எனவே நீங்கள் அதற்கு ஏற்றார் போல உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 

தொழில் : 

தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் முக்கியத்துவம் அளித்து முன்னேறுவீர்கள். நீங்கள் காட்டும் ஈடுபாடு உங்களுக்கு பண வரவை ஏற்படுத்தித்தரும். உங்கள் தொழிலுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். என்றாலும் சில அதிருப்திகரமான சூழ்நிலை நிலவும். 

தொழில் வல்லுநர் : 

நீங்கள் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்போடும் உங்கள் வேலைகளை செய்வீர்கள். இது உங்களுக்கு மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தரும். கடந்த காலங்களில் நீங்கள் இழந்தவற்றை மீண்டும் பெறுவீர்கள். பதவியும் பாராட்டும் உங்களைத் தேடி வரும் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இந்த மாதம் இருக்கும். 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் உங்களை தாக்கலாம். மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு மருத்துவரின் ஆலோசனை கேட்பது நல்லது.  அதே சமயத்தில் எளிய உடற்பயிற்சிகள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 


மாணவர்கள் : 

மாணவர்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டிய மாதம் இது.  நீங்கள் படித்ததெல்லாம் மறந்து போகாமல் இருக்க தியானம் மேற்கொள்வது நல்லது. சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சி உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். ஆசிரியரின் அறிவுரை கேட்டு நடப்பதும் நண்பர்களுடன் ஒத்துப் போவதும் உங்களுக்கு மேன்மையை ஏற்படுத்தித் தரும்.

சுப தினங்கள் : 4,5,11,12,13,18,19,23,24

அசுப தினங்கள் : 14,15,17,25,26,27

பரிகாரம்:

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் பூஜை மற்றும் வழிபாடு மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுவது.
ஸ்ரீ சனிபகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுவது.
ஏழை, எளியோர், முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்தல், அன்னதானம் அளித்தல்.


banner

Leave a Reply