AstroVed Menu
AstroVed
search
search

January Month Kadagam Rasi Palan 2021

dateDecember 4, 2020

கடகம் ஜனவரி மாத 2021 ராசி பலன்:

பொதுப்பலன்கள்: கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் இறை நம்பிக்கை உங்கள் மனதில் ஊற்று போலப் பெருகும்.  அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் அசையாத நம்பிக்கை உங்கள் மனதுள் தோன்றும் மாதமாக இந்த மாதம் இருக்கும். குடும்ப உறவுகள் குறீப்பாக கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் மற்றவர்களின் ஒத்துழைப்பை நீங்கள் பெறுவீர்கள்.  கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பார்கள். உங்கள் திருமணம் மற்றும் புதிய தொழில் துவக்கம் போன்றவற்றிற்கு  உங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.  நீங்கள் தனி மனிதராக எதையும் சாதிக்க இயலாது, மற்றவர்களின் ஒத்துழைப்பும் தேவை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் காலக் கட்டமாக இந்த மாதம் இருக்கும். கடக ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.


 
வேலை: வேலையில் இருக்கும் அதாவது பணி புரியும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் அனுகூலமான நிலை இருக்கக் காண்பீர்கள்.  உங்கள் பணியிடத்தில் காணப்படும் முக்கியமான பிரச்சினை அல்லது நிகழ்வு குறித்து நீங்கள் வீட்டில் மூத்தோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வது சிறப்பு. உங்கள் மீதும் உங்கள் நலனிலும் அக்கறை கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இந்த மாதம் உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.. பணி நிமித்தமாகப் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் ஆதாயமும் பெறுவீர்கள். 

காதல் உறவு: நீங்கள் திருமணமான தம்பதிகள் என்றால், உங்கள் முயற்சிகளின் மூலம் கணவன் மனைவி  உறவு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். இருவரும் கருத்து ஒருமித்து வாழ்வீர்கள். உறவுகளில் பிரச்சினை ஏற்படுத்திய  தவறுள் உங்கள் வாழ்வில் மீண்டும் நிகழாமல்  காத்துக் கொள்ள  முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் இருவருக்குமான பரஸ்பர நல்லுறவை மேம்படுத்த  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கவனமாகப் பழக வேண்டும்.  இந்த மாதம் நீங்கள் வீட்டிற்குத் தேவையான மரச் சாமான்களை வாங்கி உங்கள் வாழ்க்கைத்துணைக்கு  பரிசாக அளித்து அவர்களை மகிழ்ச்சியுறச் செய்வீர்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை : அதிக செலவுகள் உங்களை அவதியுறச் செய்யும். தேவையற்ற செலவுகள் உங்கள் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தும்.  உங்கள் வாழ்க்கைத் துணை காரணமாக அதிகமான தேவையற்ற செலவுகள் ஏற்படும். இந்த மாதம் நிதிநிலை உங்களுக்கு சவாலானதாக இருக்கும் என்பதால் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதன் மூலம் நீங்கள் ஓரளவு நிலைமையை சமாளிக்கலாம்.  மேலும் நீங்கள் படிப்படியாக பொருளாதார முன்னேற்றம் காணலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கடன் கொடுப்பது அல்லது வாங்குவதற்கு இந்த மாதம் ஏற்றமானதாக இருக்காது.

உங்கள் நிதிநிலை மேம்பட : குபேர பூஜை

ஆரோக்கியம்: உங்கள் ஆரோக்கியத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை அக்கறை கட்டுவார் என்பது உங்களுக்கு ஆறுதலான விஷயம் ஆகும்.. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிட்டும். எனவே இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  பெரிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏதும் ஏற்படாது.  வேலை மற்றும் தொழிலில் காணப்படும் அதிக பணிச் சுமை உங்கள் ஆரோக்கியய்த்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால்  நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரக பூஜை

தொழில் : தொழில் செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் அனுகூலமாக இருக்கக் காண்பார்கள். குறிப்பாக இந்த மாதம் உங்களின் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். என்றாலும் ஒப்பந்தங்கள் ஏதாவது கையொப்பமிட வேண்டியிருந்தால் ஒன்றிற்கு இரண்டு முறை கவனமாக ஆராய்ந்து செயல்படுங்கள் நீங்கள் லட்சியத்துடன் செயல்பட்டு தொழிலில் வெற்றி காண்பீர்கள்.   வெளிநாட்டு தொழில்  வாய்ப்பை விரும்புபவர்களுக்கு  அது கைகூடும் என்றாலும் கவனமாக செய்லப்டாவிட்டால் எதிர் காலத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

தொழில் வல்லுனர்கள் : இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் கடின முயற்சிகள் யாவற்றிற்கும் கை மேல் நல்ல பலன்கள் கிட்டும். என்றாலும் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கிணங்க சிறிது காலம் பொறுத்திருந்தால் தான் உங்கள் கடின உழைப்பிற்கு இந்த மாதம் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். உங்கள் இலக்கில் விடா முயற்சியுடன் செயல்பட்டால் நீங்கள்  அதனை எட்டிப் பிடிக்க இயலும். பணி நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் ஆதாயமும் பெறுவீர்கள்.

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : அங்காரக பூஜை

மாணவர்கள் : கல்வி பயிலும் கடக ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றிப் பாதையில் நடைபோடுவார்கள். உங்கள் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் தடைகளைத் தாண்டி நீங்கள் வெற்றி இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சென்ற மாதத்தைவிட இந்த மாதம் அனுகூலமாக இருக்கக் காண்பீர்கள். நீங்கள் ஊக்கத்துடன் செயல்பட்டு தடைகளைத் தாண்டி கல்வியில் வெற்றி காண்பீர்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். கலைத்  துறை மற்றும் படைப்புத் துறையில் இருக்கும் மாணவர்களும் இந்த மாதம்  மிகவும் அனுகூலமாக இருக்கக் காண்பார்கள். போட்டித் தேர்வுகளை நீங்கள் சிறந்த முறையில் எழுதி முடிப்பீர்கள்.

கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை

சுப நாட்கள் :  4, 5, 6, 7, 8, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 31
அசுப நாட்கள் :  1,2,3, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 23, 26, 27, 28, 29, 30.


banner

Leave a Reply