மிதுனம் ராசி பலன் ஜனவரி 2020 | Mithunam Rasi Palan January 2020 in Tamil

பொதுப்பலன்கள் :
மிதுன ராசி அன்பர்களே ! இந்த மாதம் நன்மையான மற்றும் தீமையான பலன்கள் கலந்து காணப்படும் ஒரு சுமாரான மாதமாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் நிலையாக இருக்காது. அதன் காரணமாக உங்கள் செயல்களும் சீராக இருக்காது. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ளள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைவதற்கு விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். இருவரும் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். உடன் பிறந்த சகோதரர் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் கிடைக்கலாம். என்றாலும் தாய் வழி உறவினர்களிடம் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தொழில் செய்பவர்கள் சிறிது கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். தொழிலில் முடக்க நிலை காணும் நிலையையும் நீங்கள் சந்திக்க நேரும். பண வரவு சுமாராக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதே சமயத்தில் திடீர் விரயம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உங்களுக்கு வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் மனைவியின் உடல் நிலையிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
மிதுன ராசி அன்பர்களுக்குபொதுவாகவே காதல் கை வந்த கலையாக இருக்கும். அந்த நிலையில் இந்த மாதம் நீங்கள் சற்று வித்தியாசமான சூழ்நிலையை சந்திக்க நேரும். உங்கள் காதல் விவகாரங்கள் கற்கண்டாய் இனிப்பதற்கு பதில் மனதில் கசப்புகளை கொண்டு சேர்க்கும். எனவே உங்கள் காதல் விவகாரங்களை கவனமுடனும் பக்குவத்துடனும் நீங்கள் கையாள வேண்டும். கணவன் மனைவி தங்களுக்குள் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்ளாவிட்டால் குழப்பங்களை சந்திக்க நேரும். எனவே உறவில் கவனம் தேவை.
நிதிநிலை :
நிதி நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் மிகச் சிறந்த பலன்களை காண முடியாவிட்டாலும் ஒரேயடியாக மோசமான பலன்கள் இருக்காது. நன்மை தீமை என இரண்டு பலன்களும் கலந்து காணப்படும். உங்கள் தந்தை மூலம் நீங்கள் நிதி சம்பந்தமான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் கடன்களிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பினைப் பெறலாம். செலவுகளைப் பொறுத்தவரை இந்த மாதம் சாதாரண செலவுகளே இருக்கும்.
வேலை :
வேலை செய்யும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் பணியில் ஒரு திருப்திகரமான நிலையைக் காண நேரும். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். அதே சமயத்தில் உங்கள் பொறுப்புகளும் அதிகரிக்கும். உங்கள் கடமைகளை நீங்கள் சரி வர ஆற்ற வேண்டியது அவசியம். அது உங்களுக்கு பிறரின் பாராட்டைப் பெற்றுத் தரும். அதன் மூலம் உங்கள் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகும்.
தொழில் :
தொழில் செய்யும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தொழில் சம்பந்தமான எந்தவொரு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து முடிவெடுக்க வேண்டும். தீர ஆலோசித்து நீங்கள் முடிவு எடுத்து செயலாற்றினால் அதன் மூலம் நீங்கள் வெற்றி வாய்ப்புகளைப் பெற முடியும். தொழில் தொடர்பாக இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு சாதகமானதாகவும் வெற்றியை அளிப்பதாகவும் அமையும்.
தொழில் வல்லுனர்:
மிதுன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டும். உங்கள் தொழில் சம்பந்தமான எந்தவொரு முடிவுகளையும் நீங்களே சுயமாக சிந்தித்து எடுப்பது நல்லது. பிறரை ஆலோசித்து முடிவெடுத்தால் அவர்களின் தவறான ஆலோசனை காரணமாக பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் சுயமாக சிந்தித்து அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். அதே சமயத்தில் நல்ல நிபுணர்களின் ஆலோசனை கேட்டு அதனை ஆராய்ந்து பார்த்து செயலாற்றினால் அதன் மூலம் உங்களுக்கு சிறந்த பலன்கள் கிட்டும்.
ஆரோக்கியம் :
மிதுன ராசி அன்பர்களின் உடல் நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். உங்கள் மனதில் ஒரு சாந்தமான நிலையை நீங்கள் அனுபவிப்பீர்கள். மன அழுத்தத்தில் இருந்து இந்த மாதம் நீங்கள் விடுபடுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நீங்கள் உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்துங்கள். காரமான உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள். தியானம் மற்றும் யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மாணவர்கள் :
மிதுன ராசி மாணவர்களைப் பொறுத்த வரை இந்த மாதம் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டிய மாதமாக இருக்கும். மேலும் நீங்கள் கூடுதல் நேரம் செலவழித்து படிக்க வேண்டிய அவசியம் இருக்கும். எனவே நீங்கள் கடின முயற்சி செய்ய வேன்டியிருக்கும். என்ற போதிலும் இந்த மாதம் கல்வி முன்னேற்றம் சாதாரணமாகவே இருக்கும். கடும் முயற்சிக்குப் பின்னரே பலன் கிடைக்கும். நீங்கள் நடைமுறையில் பாடங்களை நன்கு தெரிந்து கொள்வீர்கள். தகவல் பரிமாற்றத்தில் கவனம் தேவை.
சுப நாட்கள் : 5,6,10,11,12,18,19
அசுப நாட்கள் : 7,8,9,20,21,25,26
பரிகாரம்:
ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஆஞ்சநேயர் மற்றும் துர்க்கை வழிபாடு மற்றும் பூஜை செய்தல் மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
புதன், சனி பகவானுக்கு பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு உதவுதல். கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்தல்.
