பொதுபலன்கள் :
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும் மாதம் ஆகும். பண வரவு சிறப்பாக இருக்கும். லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். குழந்தைகளுடன் அன்பும் பாசமும் கொண்டு பழகுவீர்கள். தாய் வழியில் நிலம் மற்றும் சொத்துக்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனைவி வழியிலும் ஆதாயங்கள் வந்து சேரும். திடீர் யோகங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதே சமயத்தில் இளைய சகோதரர் மூலம் சில விரயங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. குடும்ப குதூகலம் மட்டுமன்றி உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் உங்களுக்கு புதிய நண்பர்கள் உருவாகுவார்கள். தொழில் செய்வபவர்கள் நீங்கள் மேற்கொள்ளும் தொழிலில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் செய்யும் தொழிலில் சிறந்த லாபம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாவிட்டால் மருத்துவ செலவுகள் மேற்கொள்ள நேரும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
மகர ராசி காதலர்களுக்கு காதல் உறவு இனிமையாக இருக்கும். காதல் வாய்ப்பிற்கு காத்திருப்பவர்களுக்கு காதல் முயற்சிகள் கை கூடும். குடுமபத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் பொங்கும். பிரிந்து இருக்கும் திருமணமான தம்பதியர் இந்த மாதம் ஒன்று கூடுவார்கள். திருமண வாழ்க்கையில் இனிமை பொங்கும்.
நிதி :
மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த பண வரவு இருக்கும். அபரிமிதமான பண வரவு உங்களை புதிய தொழிலில் ஈடுபட வைக்கும். எனவே சிறிது சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரும். என்றபோதிலும் நீங்கள் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் சிறந்த லாபம் காண்பீர்கள்.
வேலை :
பணியில் இருப்பவர்கள் சிறு சிறு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிவோர் உங்களுக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு உள்ளதால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட தயங்குவார்கள். எனவே கவனமுடன் பணியாற்றவேண்டும். எந்த வேலையை செய்தாலும் ஒரு முறைக்கு இரு முறை ஆராய்ந்து செயல்படுவது சாலச் சிறந்தது.
தொழில் :
மகர ராசி அன்பர்கள் தங்கள் தொழிலை வளர்க்க அதிக கவனம் செலுத்தும் மாதமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் கவனம் காரணமாக தொழிலில் சிறந்த பலனைத் நீங்கள் பெறுவீர்கள். உங்கள் மனதில் நேர்மறை எண்ணம் நிறைந்து இருக்கும். உங்களின் இந்த நேர்மறை எண்ணத்தை செயலாக்கினால் உங்கள் ஆற்றல் மற்றும் உற்சாகம் பொங்கிப் பெருகும். அதன் காரணமாக நீங்கள் சிறந்த நன்மைகளை அடைவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்களையும் மேற்கொள்வீர்கள்.
தொழில் வல்லுநர் :
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் சில தாமதங்களை சந்திக்க நேரும். என்றாலும் உங்கள் முன்னேற்றம் என்ற இலக்கை நீங்கள் எட்டிப் பிடிப்பீர்கள். பணியிடத்தில் நீங்கள் உங்கள் சக பணியாளர்களுடன் தேவையின்றி பழகுவதை தவிர்க்கவும். உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் கடின முயற்சி உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.
ஆரோக்கியம் :
மகர ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு பணிகள் அதிகம் காணப்படும் காரணத்தால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட இயலாத நிலை இருக்கும். வயதான மகர ராசி அன்பர்களுக்கு மூட்டு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே நீங்கள் அதிக சிரமம் கொள்ளாமல் ஒய்வு எடுத்துக் கொள்வது உள்ளது.
மாணவர்கள் :
மகர ராசி மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள். படிப்பில் மட்டுமின்றி பிற கலைகள் மற்றும் விளையாட்டுக்களில் உங்கள் ஆர்வம் வியக்க வைக்கும். அதில் நீங்கள் பங்கேற்று பிறரை வியக்கச் செய்வீர்கள். என்றாலும் பாடங்கள் படிப்பதில் உங்கள் கவனத்தை சிதற விடக் கூடாது. வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்க விரும்புபவர்கள் இப்பொழுது நல்ல வாய்ப்பினைப் பெறுவார்கள்.
சுப தினங்கள் : 9,10,18,19,20,21,22
அசுப தினங்கள் : 11,12,13,16,17,23,24.
பரிகாரங்கள்:
ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ விநாயகர் வழிபாடு, பூஜை செய்வது மற்றும் ஆலயங்கள் சென்று வழி படுவதும் நன்மை தரும்.
சனி பகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழி படுதல்.
மாற்று திறனாளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு உதவி செய்தல் மற்றும் அன்னதானம் செய்தல்.

Leave a Reply