AstroVed Menu
AstroVed
search
search

கடகம் ராசி பலன் ஜனவரி 2020 | Kadagam Rasi Palan January 2020 in Tamil

dateDecember 31, 2019

பொதுப்பலன்கள் :


கடக ராசி அன்பர்களே, உங்கள் வாழ்க்கை இந்த மாதம் சீராக செல்வதாக உணர்வீர்கள். உங்கள் நடவடிக்கைகள் மூலம் நீங்கள் மற்றவர்கள் முன்னிலையில் முக்கியத்துவம் பெறுவீர்கள்.  நீங்கள் சமூக வட்டங்களில் பிறருடன் கலந்து பழகுவது மற்றும் பொது நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களில் பங்கு கொண்டு மற்றவர்களின் கவனத்தைக் கவருவீர்கள். இது ஆரம்பக் கட்டங்களில் உங்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் இருந்தாலும் உங்கள் ஆர்வம் நீடிக்காது. நீங்கள் தனிப்பட்ட வகையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முயலவீர்கள். ஆன்மிகம் மீதான உங்கள் ஆர்வம் காரணமாக நீங்கள் ஆன்மீகப்  பயணங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள். ஆன்மீக குருமார்களை உங்கள் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்வீர்கள்.  பணியிடத்தில் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு எழும் வாய்ப்பு உள்ளது.  குடும்ப உறுப்பினர்களிடமும் நீங்கள் கருத்து வேறுபாடு எழாத வகையில் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் சற்று கவனம் மேற்கொள்ள வேண்டும். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!


காதல் மற்றும் திருமணமானவர்களுக்கு :


கடக ராசி காதலர்களுக்கு காதல் உறவு சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் துணையின் தேவைகளை நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றித் தரவேண்டிய சூழல் இருக்கும். அதற்குத் தகுந்தாற்ப் போல உங்கள் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். திருமணமான தம்பதியர்களுக்குள் உறவு முறை  சாதாரணமாக இருக்கும்.


நிதி :


கடக ராசி  அன்பர்களுக்கு நிதி நிலையைப் பொறுத்த வரை இந்த மாதம் சிறப்பான மாதம் என்று கூற முடியாவிட்டாலும் ஓரளவு சாதாரணமாக இருக்கும் என்று கூறலாம். பண விஷயத்தில் உங்கள் தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். இந்த மாதம் நீங்கள் மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்ய நேரலாம். 


வேலை :


வேலை புரியும் கடக ராசி அன்பர்கள் பணியிடத்தில் சற்று நல்ல பலன்களைக் காண முடியும். உங்களோடு உடன் பணி  புரியும் சகாக்கள் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை நல்குவார்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். எனவே பணியிடத்தில் உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்று மேலும் சில வேலைகள் செய்யும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.  அவர்களின் அறிவுரைப்படி பணிகளை முடித்துக் கொடுப்பது  நல்லது.

 

தொழில் :

தொழில் செய்யும் கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மிகவும் அனுகூலமான மாதமாக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் மேற்கொண்டுள்ள தொழிலில் நீங்கள் தலைமைப் பண்பை கொண்டிருப்பீர்கள். அதன் மூலம் பிறருக்கு நீங்கள் உத்வேகத்தை அளிப்பீர்கள்.  நீங்கள் மேற்கொள்ளும் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பதற்கான முயற்சிளை மேற்கொள்ளுங்கள். 

தொழில் வல்லுனர்கள் :


கடக ராசி தொழில் வல்லுனர்களே!  இந்த மாதத்தில்  நீங்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாதத்தின் முற்பகுதியில் நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள். மேலும் நீங்கள் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கு சிறந்த வகையில் இப்பொழுதே திட்டமிடுவீர்கள். மாதத்தின் முற்பகுதி உங்களுக்கு சாதகாகமான நேரமாக இருப்பதால் அந்தக் காலக் கட்டத்தை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  மாத இறுதியில் நீங்கள் கவனமுடன் செயல்பட்டால் நன்மை பெறவீர்கள். 

ஆரோக்கியம் :

கடக ராசி நேயர்களே! உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சுமாரான நிலையே காண்பீர்கள். உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் சிறிது குழப்பத்துடன் காணப்படும். நீங்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்குப் பொருந்தும் வகையிலான உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும்.

மாணவர்கள் :

கடக ராசி மாணவர்களே! உங்கள் நேர்மறையான சிந்தனையே உங்களுக்கு சிறந்த பலனை பெற்றுத் தரும். அந்த எண்ணத்தின் காரணமாக நீங்கள் உங்கள் திறமை மற்றும் ஊக்கத்தை வளர்த்துக் கொள்ள இயலும். மனதில் தைரியம் மற்றும் உற்சாகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த நேர்மறை குணங்கள் யாவும் நீங்கள் கல்வியில் வெற்றி பெற உங்களுக்கு உதவும். 

சுப தினங்கள் : 2,3,4,7,8,9,14,15,20,21
அசுப தினங்கள் : 1,10,11,22,23,24,27,28,29

பரிகாரம்:

திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் காலபைரவர் வழிபாடு, பூஜை செய்தல் மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுவதும் நல்லது.

சந்திர பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்தல்.

மீன்களுக்கு உணவளித்தல். தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்த்தல்.
 


banner

Leave a Reply