AstroVed Menu
AstroVed
search
search

மீனம் ராசி பலன் ஜனவரி 2021 | January Matha Meenam Rasi Palan 2021

dateDecember 4, 2020

மீன ராசி ஜனவரி மாத 2021 பலன்கள்:

பொதுப்பலன்கள்: மீன ராசி அன்பர்களே! இந்த வருட ஆரம்பமே உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.  உங்கள் வாழ்க்கை இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அன்பால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. அன்பும்  அனுசரனையும் இருந்து விட்டால் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குடும்பம், அன்பு, பாசம், காதல், பொருளாதாரம் என எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு சிறந்த நற்பலன்கள் கிட்டும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் நல்லிணக்க உறவு மேற்கொள்வார்கள். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களும் நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீக நாட்டமும் இறை நம்பிக்கையும் உங்களுக்கு நல்வழி காட்டும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் மற்றும் உங்கள் நலம் விரும்பும் நண்பர்களின்   ஆலோசனை மற்றும் அறிவுரை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.  உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும் வாய்ப்பு இந்த மாதம்  உங்களுக்கு கிடைக்கும். மீன ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

வேலை : நீங்கள் பணி செய்பவராக இருந்தால் இந்த மாதம் உங்களுக்கான மாதமாக இருக்கும். பணியிடத்து சூழ்நிலை அனுகூலமாக இருக்கும். பணிகளின் சுமை அல்லது பணியிடத்தில் பதட்ட நிலை எதுவும் காணப்படாது. என்றாலும் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் பணியில் பெயர், புகழ் அங்கீகாரம் போன்றவற்றை படிப்படியாக  பெற  இயலும். உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு   ஆதரவாக இருப்பார்கள். சக பணியாளர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பையும் அளிப்பார்கள். பணியிடத்தில் பரஸ்பர ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் நீங்கள் சிறந்த முன்னேற்றம் காண உதவும். 

காதல் உறவு : இளம் வயது மீன ராசி அன்பர்களின் மனதில் காதல் அரும்பு மலரும் மாதமாக இந்த மாதம் இருக்கும். நீங்கள் பணி செய்யும் இடம் அல்லது நட்பு வட்டாரத்தில் உங்கள் காதல் துணையை நீங்கள் கண்டு கொள்வீர்கள். என்றாலும் உங்கள் காதல் உறவு மலர சில குழப்பங்கள் தடையாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் காரணமாக சில சச்சரவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே உங்கள் காதலை வெளிப்படுத்த இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற தருணமாக இருக்காது.
     
காதல் உறவு மேம்பட : விஷ்ணு பூஜை 

நிதிநிலை : மீன ராசி அன்பர்களின் நிதிநிலை சென்ற மாதத்தை விட இந்த மாதம் சற்று ஏற்றத்துடன் இருக்கும். என்றாலும் முதலீடு குறித்த விஷயங்களில் நீங்கள் சிறிது கவனமாகச் செயல்பட வேண்டும். ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்வது உசிதமல்ல. பணத்தை கடனாகப் பெறுவதும் வாங்குவதும் தவிர்ப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். பணம் குறித்த விஷயங்களில் முடுவெடுக்கும் முன்பு உங்களின் பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்த கொள்வது சிறப்பு. இது உங்கள் செலவினங்களைக் குறைந்து சேமிப்பை அதிகரிக்க உதவும். 

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரக பூஜை

ஆரோக்கியம் : மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியம் குறித்த  பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.  ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதன் காரணமாக மருத்துவ சிகிச்சை எதுவும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இருக்காது.   என்றாலும் உங்களுக்கு கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  மேலும் உங்கள் உணவு முறையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட: சூரியன் பூஜை  

தொழில்: தொழில் செய்யும் மீன ராசி அன்பர்கள் தங்கள் தொழிலில் சுமுகமான நிலை இருக்கக் காண்பார்கள்.  இந்த மாதம் எந்தவிதமான போராட்டங்களும் இல்லாமல் எளிதில் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  குறிப்பாக கூட்டுத் தொழில் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளுடன்  கலந்தாலோசனை மேற்கொள்வீர்கள். தொழில் குறித்த ஆவணங்களை கையொப்பமிடுமுன் அது தொடர்பான நிறை குறைகளை ஆராய்ந்து பிறகு கையொப்பமிடுவது நல்லது.

தொழில் வல்லுநர் : இயல்பாகவே சிந்தனை மிக்கவர்களாகவும் உணர்ச்சி வசப்படுபவர்க்லாகவும் இருக்கும் நீங்கள் இந்த மாதம் உங்கள் பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாக அனுகுவீர்கள். எனவே உணர்ச்சிப் பூர்வமாக எந்தவொரு முடிவையும் எடுக்காமல் நடைமுறையை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். யதார்த்த அணுகுமுறை மேற்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.  இந்த மாதம்  உங்கள் திறமைகள் உங்கள் நண்பர்களைக் கவரும், அவர்கள் உங்களிடம் ஆலோசனைகளைக் கேட்க விரும்புவார்கள். 

வேலையில் முனேற்றம் காண  : சுக்கிரன் பூஜை 

மாணவர்கள்:   மீன ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் ஓரளவு சாதகமான நிலை காண்பார்கள். உங்கள் விருப்பத்திற்கேற்ற கல்வி பயிலவும்   நீங்கள் விரும்பும் பள்ளி அல்லது கல்லூரிகளில் சேர்க்கை  கிடைக்கப் பெறுவீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின்  உதவி உங்களுக்கு கிடைப்பதால் மனதில் பதட்டமற்ற நிலை இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். 

சுப நாட்கள்:  1, 2,3, 4, 5, 6, 7, 8,12, 15, 16 ,17, 18, 19, 20, 22, 30
அசுப நாட்கள் : 9, 10, 11, 13, 14, 21, 23 24, 25, 26, 27, 28, 29, 31


banner

Leave a Reply