AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

சோமவார விரதத்தை எப்படி கடைபிடிப்பது?

November 11, 2020 | Total Views : 501
Zoom In Zoom Out Print

திங்கட்கிழமை சோமவாரம் என்றழைக்கப்படுகிறது. சிவபெருமானை வேண்டி திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்ற பெயர் பெற்றது. விரதங்களுள் சிறந்தது சோமவார விரதம். திங்கட்கிழமை அமாவாசையுடன் கூடிய  சோமவார விரதம் அதிக பயன்களைத் தரும். சோமவார விரதத்தை ஆண், பெண் இருவருமே மேற்கொள்ளலாம். வீட்டிலிருந்தும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். விரதமிருக்கும் நாளன்று மாலை சிவாலயத்துக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

சோமவார விரதத்தை எப்படி மேற்கொள்வது?

கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் சோமவார விரதத்தை தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமையன்று தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

விரதம் மேற்கொள்பவர்கள் ராகு காலத்திற்கு முன்பாகவே பூஜையை தொடங்க வேண்டும்.    அதிகாலையில் கணபதியை வழிபட்டு விரதத்தை தொடங்கலாம். மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் காட்ட வேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும். கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பிறகே பூஜையை தொடங்க வேண்டும். தேங்காய், வாழைப்பழம், சாதம், நெய், பருப்பு, பாயாசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.  வழிபாட்டின் போது ஓம் நமசிவாய என்ற

மந்திரத்தை உச்சரிப்பது சிறந்த வாழ்வைத் தரும்.  வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்ததும், வயதான தம்பதியரை பார்வதி, பரமேஸ்வரனாக பாவித்து சந்தனம், குங்குமம் வழங்கி நமஸ்காரம் செய்ய வேண்டும். புது வேட்டி, ரவிக்கைத் துணி, வெற்றிலை, பாக்கு, பூ, மஞ்சள், பழம், தட்சணை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு, அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும்.

சோமவார விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி மேற்கொள்ள முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும் சைவ உணவை சாப்பிட்டுக் கொள்ளலாம். அல்லது பால், பழம் மட்டும் உண்ணலாம். இந்த விரதத்தை ஒருவர் வாழ்நாள் முழுவதுமோ, அல்லது அவர்களால் முடிந்த அளவு மேற்கொள்ளலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை மேற்கொள்வது நலம் பயக்கும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் முன்வினை மற்றும் இவ்வினை பாவங்கள் யாவும் நீங்கும். நோய், நொடிகளிலிருந்து விடுபடலாம். சகல ஐஸ்வர்யங்களையும் எம்பெருமான் சிவனிடம் இருந்து பெறலாம்.  மேலும் பலன்கள் மற்றும் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள

banner

Leave a Reply

Submit Comment