Navaratri 2023 - Invoke the Blessings of 28 Forms of Divine Feminine Energy to Destroy Negativity and Bestow Power, Prosperity and Progress in Life Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

அனுமன் துதி பாடல்கள்

June 2, 2023 | Total Views : 316
Zoom In Zoom Out Print

வளமும் வலிமையையும் அளிக்கும் அனுமன் துதி பாடல்கள்

ஸ்ரீ ஆஞ்சநேயா ஆனந்த யோக மூர்த்தி

தேடியே உன்னிரு பாதங்கள் சரணடைந்தோம்

வல்லமை யாவும் தந்தருள்வாய்

எங்கள் வாயு குமாரா

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தாய் போற்றி !
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

ஶ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம

ஆஞ்சநேயா சுவாமி பாடல் வரிகள்

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

சஞ்சீவி மலை பெயர்த்தாய் ஆஞ்சநேயா உந்தன்
திரு கரத்தில் ஏந்தி வந்தேன் ஆஞ்சநேயா
லட்சுமணன் உயிர் காத்தாய் ஆஞ்சநேயா
சுக்கிரீவன் உயிர்கொடுத்தாய் ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

பாண்டவர்கள் வீமனுக்கு அண்ணனுமானாய்
லங்காபுரி எரித்து நின்ற தீரனுமனாாய்
ராமருக்கு கை கொடுத்த தெய்வம் நீ அப்பா
பார் போற்றும் ராமபிரான் பக்தன் நீயப்பா

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

பக்தர் கூட்டம் நாங்கள் ஐயா ஆஞ்சநேயர்
பஜனை பாடிப் போற்றுகின்றோம் ஆஞ்சநேயா
சரணம் சரணம் ஐயா ஆஞ்சநேயா – உந்தன்
பாதமலர் சரணம் ஐயா ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

 

அஞ்சனா நந்தவீரம்
அஞ்சனா நந்தவீரம் அசோக வன சஞ்சாரம்
வந்தே லங்கா பயங்கரம்
சீதா சோகவினாசகரம்
அஞ்சனா நந்தவீரம் அசோக வன சஞ்சாரம்

 

அனுமன் துதி

மிகச் சிவந்த முகமுடைய வானரன்
மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன்
பகை யழித்திடும் வாயுவின் புத்திரன்
பாரிசாத மர நிழல் வாழ்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்
.ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்.

அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன்
ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில்
சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன்
திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்

சித்த வேகமும் வாயுவின் வேகமும்
சேர்ந்தவன் தன் புலன்களை வென்றவன்
புத்தி மிக்கவர் தம்முட் சிறந்தவன்
புகழி ராமனின் தூதுவன் வாயுவின்
சேயன் வானர சேனையின் முக்கியன்
சென்னி தாழ்த்தியச் செம்மலைப் போற்றுவேன்.

யாரும் செய்வதற் கேயரி தானதை
ஐயநீ செய்குவை ஏதுனக் கரியது?
பாரில் என்செயல் நீநிறை வேற்றிவை.
பரிவின் ஆழிநீ இராம தூதனே!
ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!

அறிவு மற்றும் உடல் வலி நற்புகழ்
ஆளும் சொற்றிறம், அச்சமிலா மனம்
வறிய புன்பிணி நீங்கிய மேநிலை
வளரும் தைரியம் மேவிடும் நிச்சயம்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்திடின்
அனுபவத் தினில் இவைபெற லாகுமே!

 

 

Leave a Reply

Submit Comment