கௌரி மந்திரம் | Gowri Mantram in Tamil

அண்ட சராசரங்களை இயக்கம் அன்னை பார்வதி பல ஸ்வரூபங்களில் போற்றி வணங்கப்படுகிறாள். அம்பிகையின் பெயர்களில் ஒன்று கெளரி என்பதாகும். மங்களங்களை அளிக்கும் அம்பிகையை வணங்கும் மந்திரங்களுள் ஒன்று கெளரி மந்திரம் ஆகும்.
கௌரி மந்திரம்:
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே!! –
பொருள்:
அனைத்து விதமான மங்களங்களையும் அருள்பவளே,
சர்வ சக்திகளுக்கும் ஆதி சக்தியான தேவியே
உயிர்கள் அனைத்தையும் காப்பவளே
மூன்று கண்களை கொண்டவளே
உன்னை வணங்குகிறேன்.
இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் சக்தியின் அருளால் உங்கள் இல்லத்தில் அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். தரித்திரம் தொலையும். குடும்ப சுபிட்சம், வாழ்வில் முன்னேற்றம், செல்வ வளம், மணப்பேறு, மங்கலகரமான வாழ்வு என சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.அதோடு அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும்
