விருச்சிகம் ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Viruchigam Rasi Palan 2021

விருச்சிகம் ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன்:
இளம் வயது விருச்சிக ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். உங்களுக்கு விருப்பமான துணையைக் கண்டு கொள்ளும் வாய்ப்பு இந்த மாதம் உங்களுக்கு கிட்டும். . திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கைத் துணைக்கென நேரம் ஒதுக்க இயலாத காரணத்தால் உறவில் அதிருப்தியும் மகிழ்ச்சியின்மையும் இருக்கும். நிதிநிலையைப் பொறுத்தவரை பண வரவு குறைவாக இருக்கும். பெரிய அளவில் லாபம் எதுவும் இருக்காது. உங்கள் ஆரோக்கியம் குறித்த செலவுகள் எழும் என்பதால் அதற்கு சிறிது பணத்தை நீங்கள் ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்கள் விற்பனை மூலம் அதிக லாபம் காண்பார்கள். பணியில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்கள் அங்கீகாரம் பெற சிறிது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் விடா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
வேலை :
கிரக நிலைகள் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக அமையவில்லை. உங்கள் முயற்சிகள் அதிகமாக இருந்தாலும் பலன்கள் குறைவாக கிட்டும். பணியிடத்தில் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிட்டும். இந்த மாதம் நீங்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
காதல் / குடும்ப உறவு:
குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்க வாய்ப்பில்லை. உங்கள் தாய் வழி உறவினர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தின் பதட்ட நிலை காரணமாக நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நேரம் ஒதுக்க இயலாத நிலை இருக்கும். இதனால் உறவில் சில கசப்பான தருணங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரக பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் பணப்புழக்கம் சுமாராக இருக்கும். எழுத்துத் துறை, நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். வெளிநாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கணிசமான வருமானம் காண்பார்கள். என்றாலும் உங்கள் இலக்குகளை எட்ட நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பிற துறையினர் உங்கள் இலக்குகளை எட்ட நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : குபேரன் பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதீத சோம்பலும் களைப்பும் உங்களை வாட்டும். அது உங்கள் நடவடிக்கைகளில் மற்றும் செயல்களில் பிரதிபலிக்கும். பணியிடச் சூழலில் காணப்படும் பதட்டமான சூழ்நிலை காரணமாக உங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் நீங்கள் சிறிய பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
தொழில் :
தொழில் சம்பந்தமான பயணங்கள் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். வெளிநாட்டு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். வடதிசை நோக்கிய உங்கள் பயணம் மூலம் நீங்கள் சிறந்த வாய்ப்புகளைப் பெற இயலும். உங்களில் சிலர் தொழில் சார்ந்த பயணத்தை குடும்பப் பயணமாக ஆக்கிக் கொள்வீர்கள்.
தொழில் வல்லுனர்கள் :
விருச்சிக ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். கவனக் குறைவாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. கண்ணும் கருத்துமாக உங்கள் கடமைகளை ஆற்றுவதன் மூலம் நீங்கள் சிறப்பாக பணியாற்ற இயலும். நீங்கள் கவனமுடன் செயலாற்றினால் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை
மாணவர்கள் :
கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் இந்த மாதம் சாதாரன பலன்களைக் காண்பீர்கள். நீங்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும்.
கல்வியில் மேன்மை பெற : அங்காரக பூஜை
சுப நாட்கள் : 1,2,3, 4, 5, 6, 8, 14, 17, 18, 19, 20, 23, 26, 27.
அசுப நாட்கள் : 7, 9, 10, 11, 12, 13 15, 16, 21, 22, 24, 25, 28, 29, 30, 31
