AstroVed Menu
AstroVed
search
search

துலாம் ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Thulam Rasi Palan 2021

dateJanuary 8, 2021

துலாம் ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன் :

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சுமாரான பலன்களே கிட்டும். பணி செய்யும் துலாம் ராசி அன்பர்கள் சில இடர்பாடுகளை சந்திக்க நேரும். இளம் வயது துலாம் ராசி அன்பர்களுக்கு காதலுக்கு ஏற்ற மாதமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் மனதிற்கினிய துணையை நீங்கள் கண்டு கொள்வீர்கள். திருமணமான தம்பதிகள் நல்லுறவை வளர்க்க அனுசரித்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள  வேண்டும்.  பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சற்றே அனுகூலமான நிலை இருக்கும். கையில் பணம் புரள்வதில் சற்று சிரமமான நிலை காணப்படும். எனவே நிலைமையை சமாளிக்க உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தொழில் செய்பவர்கள்  சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

வேலை :

இந்த மாதம் நீங்கள் பணியில் முன்னேற்றம் காண்பது கடினம். உங்கள் சக பணியாளர்கள் அல்லது மேலதிகாரிகள் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பை  இந்த மாதம் நீங்கள் பெறுவது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். இந்த நிலையில் பணிகளை முடிப்பது உங்களுக்கு கடினமாகத் தோன்றும். பணிகள் யாவும் நிலுவையில் நின்றுவிடும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கமால் போகலாம். எனவே இந்த மாதம் பொறுமை  அவசியம்.

காதல் / குடும்ப உறவு :

நீங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களுடன் உங்கள் பொன்னான நேரத்தை கழித்து மகிழ்வீர்கள். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே  நல்லுறவு கூடும்.  ஆனால் இந்த மாதத்தின் பிற்பகுதியில் பண விஷயங்கள் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெருக : அங்காரக பூஜை 

நிதிநிலை :

உங்கள் திறமையைப் பயன்படுத்தி இந்த மாதம் நீங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்வீர்கள். அதன் மூலம் உங்கள் கையில் சரளமாகப் பணம் புழங்கும். எனவே நிதிநிலையில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். இந்த மாதம் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை  பெரிய அளவில் நஷ்டங்கள் ஏதும் ஏற்படாது என்பது உங்களுக்கு ஆறுதலான விஷயமாக இருக்கும். உங்கள் சேமிப்பைக் கொண்டு உங்கள் செலவுகளை சமாளித்துக் கொள்வீர்கள். குடுமபத்தில் வசதிகள் மற்றும் ஆடம்பரம் பெருகும். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். அதன் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. உங்கள் உடல் வலிமை கூடும். நோய் வந்தாலும் எளிதில் குணமாகும்.  என்றாலும் உங்கள் உணவில் கவனம் தேவை. உடற்பயிற்சி  உங்கள் ஆரோக்கியத்தை சீராக  தக்க வைத்துக் கொள்ள உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :  சூரியன் பூஜை 

தொழில் :.

புத்தியுள்ளவர்கள் தான் தொழிலில் வெற்றி காண முடியும்  என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு நீங்கள் இந்த மாதம் செயல்படுவீர்கள். என்றாலும் குடும்ப விவகாரங்கள் குறித்த எண்ணங்கள்  உங்கள் மனதை வாட்டும் காரணத்தால் ஈடுபாட்டுடன் தொழில் செய்வதை சிறிது கடினமாகக் கருதுவீர்கள். என்றாலும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உங்கள் தொழிலை நடத்துவீர்கள். தொழிலில் ஏற்பட்ட தாமதங்களை சரிபடுத்துவீர்கள். தொழிலை பெரிய அளவில் எடுத்துச் செல்ல தெளிவான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. 

தொழில் வல்லுனர்கள்:

இந்த மாதம் உங்கள் திறமை உங்களுக்கு கை கொடுக்கும். வேலை வேலை என்று வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதன் காரணமாக நீங்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க இயலாத நிலை இருக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பணியில் வெற்றி காண்பீர்கள என்றாலும் குடும்பத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை 

மாணவர்கள் :

ஸ்ட்ராடிங் ட்ரபுள் என்பது போல இந்த மாதம் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் போகப் போகச் சரியாகிவிடும். நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டியது அவசியம் கவனத்துடன் படித்தால் வெற்றி நிச்சயம். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடித்தவுடன் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

கல்வியில் மேன்மை பெற : சனி பூஜை 

சுப நாட்கள் :  1,2,3, 8, 9, 10, 11, 16, 17, 12, 13, 14, 21, 22, 24, 27
அசுப நாட்கள் : 4, 5, 6, 7, 15, 18, 19, 20, 23, 25, 26, 28, 29, 30, 31.


banner

Leave a Reply