தனுசு ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Dhanusu Rasi Palan 2021

தனுசு ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன்:
இந்த மாதம் உங்களுக்கு கிரக நிலை சாதகமாக உள்ள காரணத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் தம்பதிகளிடையே ஒற்றுமை இருக்கும். உங்கள் வருமானம் பெருகுவதற்கு நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மூலம் வாய்ப்புகள் பெருகும். ஆனால் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது உங்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும். வேலை செய்பவர்கள் அதிக பணிச் சுமை இருந்த போதிலும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் செயல் திறனைப் பாராட்டுவார்கள். பட்டம் படிக்கும் மாணவர்கள் பொறுமையுடன் கடினமாக உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதனை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உடற் பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
வேலை:
இந்தமாதம் பணியிடத்தில் உங்கள் படைப்பாற்றல் மற்றும் உங்கள் உற்சாக பணிக்கு உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களிடம் இருந்து உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். புதிய பணிகள் மற்றும் பொறுப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் செயல் திறன் பிறரால் பாராட்டப்படும்.
காதல்/ குடும்ப உறவு :
உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பைப் பெறுவீர்கள். இந்த மாதம் உங்கள் உறவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பொழுதை போக்க பூங்கா, சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வீர்கள். இந்த மாதம் உங்கள் உறவினர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் மாதமாக இருக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். நீங்கள் ஆபத்தான முதலீடுகளில் கூட பணத்தை முதலீடு செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய தொழிலில் முதலீடு செய்யவும் எண்ணம் கொள்வீர்கள். பணம் தேவைப்படும் நண்பர்களுக்கு பணத்தைக் கடனாக அளிப்பீர்கள். ஆனால் அந்தப் பணம் நீங்கள் திரும்பக் கேட்கும் பொழுது பணம் வாங்கியவர்களால் மறுக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏதும் இருக்காது. உங்கள் சூழ்நிலை உங்களுக்கு அனுகூலமாக இருக்கும் காரணத்தால் மனதில் அமைதியான நிலை இருக்கும். குடும்பம், அலுவலகம், உறவினர்கள் என எல்லோரிடமும் நீங்கள் மகிச்சியாக நேரம் செலவழிக்கும் காரணத்தால் நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : விஷ்ணு பூஜை
தொழில் :
உங்கள் திறமை, இந்த மாதம் நீங்கள் தொழிலில் சிறக்கவும் புதிய ஒப்பந்தங்களைப் பெறவும் உங்களுக்கு பேருதவியாக இருக்கும். உங்கள் அணுகுமுறையில் இருக்கும் ஒழுக்கம். உங்கள் நிர்வாகத் திறமை இவை அனைத்தும் இந்த மாதம் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். படைப்புத் துறை, இசைத் துறை மற்றும் சினிமாத் துறையில் உள்ளவர்கள் இந்த மாதம் வெற்றியைக் காண்பார்கள்.
தொழில் வல்லுனர்கள் :
வீடு வாங்கல் விற்றல் துறையில் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். உங்கள் முதலீடுகளின் மூலம் நீங்கள் சிறந்த வருமானம் பெறுவீர்கள். தொழில் சார்ந்த பேச்சு வார்த்தைகள் நடக்கும் போது வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். இந்த மாதம் நீங்கள் புதிய அனுபவங்களையும் பெறுவீர்கள்.
உங்கள் வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை
மாணவர்கள் :
விடா முயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் நீங்கள் படித்தால் வெற்றி இலக்கை எட்டுவீர்கள். நீங்கள் பல புதிய விஷயங்களை படிக்க ஆர்வம் காட்டுவீர்கள். பல புத்தகங்களைப் படிப்பீர்கள். ஆசிரியருக்கு மரியாதை அளிப்பீர்கள். படிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். இந்த மாதத்தின் இறுதியில் நீங்கள் மகிழ்ந்து கொண்டாடுவீர்கள்.
கல்வியில் மேன்மை பெற : அங்காரக பூஜை
சுப நாட்கள் : 7, 9, 10, 11, 12, 13, 14, 22, 23 24, 25, 26, 27, 28, 29
அசுப நாட்கள் : 1,2,3, 4, 5, 6, 8, 17, 18, 19, 20, 15, 16, 21, 30, 31
