கன்னி ராசி பலன் பிப்ரவரி 2021 | February month Kanni rasi palan 2021

கன்னி ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன்கள் :
கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். வேலை செய்யும் கன்னி ராசி அன்பர்களுக்கு பாதுகாப்பான வேலை குறித்த கவலை எழும். என்றாலும் இந்த மாதக் கடைசியில் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். தொழில் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் தங்கள் இலக்குகளை அடைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு கெட்டி மேளச் சத்தம் விரைவில் கேட்கும். திருமணமான தம்பதிகள் இடையே ஒற்றுமை இருக்கும். இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் உயரக் காண்பீர்கள். சேமிக்கும் பழக்கத்தை நீங்கள் அதிகப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள இயலும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல்/ குடும்ப உறவு :
மௌனத்தைவிடச் சிறந்த மொழி எதுவும் இல்லை. பேசிச் சண்டை மற்றும் வாக்கு வாதத்தை வளர்ப்பதை விட அனைவரிடமும் சுமுகமான உறவு ஏற்படுத்திக் கொள்ள நீங்கள் வாக்குவாதத்தைத் தவிர்த்து நல்லுறவு மேற்கொள்ள மௌனமாக இருப்பது நல்லது. தேவையான அளவு மட்டுமே பேசுங்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அனுசரித்தும் விட்டுக் கொடுத்தும் செல்வதன் மூலம் கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரக பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் உங்களுக்கு மறைமுக வழியில் அல்லது உழைத்துச் சம்பாதிக்காமலேயே பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் பூர்வீகச் சொத்துகளைப் பெறும் வகையில் இருக்கும். அல்லது உயில் சம்பந்தமான சட்டச் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவை இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். சொத்து வழக்குகளில் வெற்றியும் அதன் மூலம் பணமும் பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்கள் பணத்தின் மீது கண்ணாக இருக்கும் வாய்ப்பு உள்ள காரணத்தால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தை நீங்கள் தக்க முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை
வேலை:
பணியிடச்சூழல் எப்படியிருந்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டிய நேரம் இது. இந்த மாதம் உங்கள் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாகத் தான் இருக்கும். இந்த பதட்ட நிலையில் உங்களால் சிறப்பாக பணியாற்ற இயலாது போகவும் வாய்ப்புள்ளது. இந்த மாதக் கடைசியில் உங்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது உங்களுக்கு ஆறுதலான விஷயமாக அமையும். மேலும் அந்த வேலையில் நீங்கள் கவனமுடன் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள்.
தொழில் :
சொந்ததொழில் அல்லது வியாபாரம் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் தங்கள் தொழிலை விரிவாகவும், புதிய தொழிலைத் தொடங்கவும் எண்ணம் கொள்வீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும் வகையில் நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வங்கிக் கடன்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய தொழிலுக்கான முதலீடுகளை இப்பொழுது நீங்கள் மேற்கொள்ளலாம். நீங்கள் தொழில் நுட்ப உதவியுடன் உங்கள் தொழிலை விரிவாக்க இது ஏற்ற மாதமாக இருக்கும். உங்கள் தொழில் சார்ந்த கருத்துக்களை நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் நீங்கள் உங்கள் போட்டியாளர்களிடம் ஏமாந்து போகாமல் இருக்கலாம்.
தொழில் வல்லுனர்கள் :
கன்னி ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் சிறக்க சில புதுமையான முறைகளைக் கையாள்வார்கள். புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும். தொழில் குறித்த முடிவுகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுக்காமல் பொறுமையாக முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக தொழில் குறித்த ஆலோசனைக் கூட்டங்களில் நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டும். நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள புது பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள்.
கல்வியில் மேம்பட : அங்காரக பூஜை
ஆரோக்கியம் :
ஆரோக்கியமான மனது இருந்தால் ஆரோக்கியமான உடல் நிலை இருக்கும். அந்த வகையில் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் நீங்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சிறந்த தேக ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள மனதில் பதட்டம் கொள்ளாமல் இருங்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
மாணவர்கள் :
கன்னி ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். என்றாலும் உங்கள் முயற்சியில் தான் உங்கள் வெற்றி அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து நீங்கள் நடந்து கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் அடுத்த இலக்குளை அமைத்துக் கொள்ள உங்கள் பெற்றோர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க : சுக்கிரன் பூஜை
சுப நாட்கள் : 1,2,3, 4, 5, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 24 20, 23, 26, 27
அசுப நாட்கள் : 6, 7, 8, 15, 16, 17, 18, 19, 25, 28, 29, 30, 31
