சிம்மம் ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Simmam Rasi Palan 2021

சிம்ம ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன் :
சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். பல நல்ல பலன்களை இந்த மாதம் நீங்கள் காண இயலும். குறிப்பாக உங்கள் வருமானம் உயரும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள் என்றாலும் இந்த மாதம் புதிய முதலீடுகள் எதுவும் மேற்கொள்வது சிறப்பல்ல. செலவுகள் குறைந்தாலேயே சேமிப்புகள் அதிகரிக்கத் தானே செய்யும். திருமணம் ஆகாதவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டும் நேரம் விரைவில் அமையும். நடக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். பணியில் இருப்பவர்களும் தடைகளைத் தாண்டி சிறப்பாக பணியாற்றி தங்கள் இலக்குகளை எட்டுவார்கள். மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு :
சிம்ம ராசி இள வயது அன்பர்களுக்கு இந்த மாதம் தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற நேரமாக அமையும். திருமணமான சிம்ம ராசி அன்பர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்விப்பதற்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். இதனால் இருவருக்கும் இடையே பரஸ்பரம் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை:
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல இந்த மாதம் பணத்தை ஈட்ட வேண்டும், வசதிகளை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீவிர எண்ணம் உங்கள் மனதில் இருக்கும். அதை செயலிலும் மேற்கொண்டால் உங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள இயலும். உங்களிடம் உதவி நாடி வரும் பிறருக்கும் உதவி செய்ய இயலும். உங்கள் மனம் விரும்பும் வகையில் நன்கொடை போன்ற தரும காரியங்களுக்கு பணம் செலவு செய்வயவும் இயலும். அதன் மூலம் உங்கள் குடும்பத்தாரை மகிழ்விக்கவும் இயலும்.
வேலை :
வேலை செய்யும் சிம்ம ராசி அன்பர்கள் சிறப்பாக பணியாற்றி பணியிடத்தில் பிறரின் பாராட்டையும் பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள், உங்கள் அலுவலகத்தின் மூலம், கைபேசி, அல்லது மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களைப் பெறுவீர்கள். இதனால் நீங்கள் மேலும் சிறப்பாக பணியாற்ற இயலும்.
உங்கள் நிதிநிலை மேம்பட: லக்ஷ்மி பூஜை
தொழில் :
சிம்ம ராசி அன்பர்கள் சிலர் முழுமூச்சுடன் புதிய தொழிலை ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கு வரும் தொழில் வாய்ப்புகள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தி அவர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். ஏற்கனவே தொழில் செய்பவர்கள், புதிய தொழில் ஆரம்பிக்கவும் எண்ணம் கொள்ளுவீர்கள்.
தொழில் வல்லுனர்கள் :
சிம்ம ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். உங்கள் ஒவ்வொரு செயலிலும் தன்னம்பிக்கை வெளிப்படும். ஆனால் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை உசிதமானதல்ல. இந்த மாதம் உங்கள் தொழிலிற்காக நீங்கள் மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை
ஆரோக்கியம் :
சிம்ம ராசி அன்பர்களின் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது என்றாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மனது உற்சாகமாக இருக்கும் காரணத்தால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள் :
கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் இந்த மாதம் சிறப்பாக இருக்கக் காண்பார்கள். மனதில் எந்தவித பதட்டமும் இன்றி செயல்படுவார்கள். விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறையில் இருக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை பெறுவார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம் உங்களை உற்சாகப்படுத்தும். முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள்.
கல்வியில் மேம்ன்மை பெற : அங்காரகன் பூஜை
சுப நாட்கள் : 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 18, 19, 20, 23, 26, 27, 28, 29, 30.
அசுப நாட்கள் : 1, 2, 3, 7,15, 16, 17, 21, 22, 24, 25, 31
