February month Kadagam rasi palan 2021

கடக ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன் :
பகல் என்றால் இரவு உண்டு. நன்மை உண்டு என்றால் தீமையும் உண்டு. எனவே இந்த மாதம் கடக ராசி அன்பர்கள் தங்கள் வாழ்வில் நன்மை தீமை என இரண்டும் கலந்த பலன்களை அனுபவிப்பார்கள் என்று கூறலாம். வயதில் பெரியவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் பிரச்சினைகளைத் தவிர்க்க இயலும். உங்கள் மரியாதையையும் காத்துக் கொள்ள இயலும். வாழ்க்கையில் கற்பனையாகக் காண்பதை விட நிஜங்களை யதார்த்தமாக உணர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளும் தருணமாக இந்த மாதம் இருக்கும் எனலாம். வாழ்க்கைத் துணையின் சொந்த பந்தங்களிடம் இருந்து இந்த மாதம் சிறிது விலகி இருபது நல்லது. இந்த மாதம் குரு பகவான் மற்றும் சனி பகவான் அருளால் நீங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்
காதல் / குடும்ப உறவு :
நவீன யுகத்தில் வாழ்க்கையின் அடிப்படைத் தேவை பணம் மட்டுமே என்ற நிதர்சனமான உண்மையை நீங்கள் உணரும் வகையில் பணம் அல்லது பூர்வீகச் சொத்து விஷயத்தில் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உங்கள் ஒற்றுமையைக் குலைக்கும் என்பதால் நீங்கள் கவனமாகச் செயல் பட வேண்டியிருக்கும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நீங்கள் உறவில் அமைதியை தக்க வைத்துக் கொள்ள இயலும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : குரு பூஜை
நிதிநிலை :
பணம் என்பது உருண்டு ஓடும் தன்மை கொண்டது என்ற வகையில் இந்த மாதம் பணம் வருவதும் போவதுமாக இருக்கும். உங்கள் மனைவி மற்றும் அவர் வழி உறவினர்களுக்காக நீங்கள் சில செலவுகளை செய்ய நேரும். கையில் காசு குறைந்தால் மனதில் பதட்டம் வரத் தானே செயஐம். தேவையற்ற செலவுகள் உங்களின் பதட்டத்தையும் கோபத்தையும் அதிகரிக்கச் செய்யும். செலவு வகைகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை நீங்கள் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி குபேர பூஜை
வேலை:
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல நீங்கள் கடினமாக பணியாற்றி உங்கள் திறமையைக் காட்டும் வாய்ப்பு கிடைத்தாலும் உங்களின் கடின உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிட்டுவது கடினம். எனவே இந்த மாதம் பணியில் இருக்கும் கடக ராசி அன்பர்கள் சுமாரான பலன்களை எதிர்பார்க்கலாம். இதனால் நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது. சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் பதட்டம் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் என்பதால் கவனம் தேவை.
தொழில் :
இந்த மாதம் தனித்து தொழில் புரிபவர்களை விட கூட்டுத் தொழில் செய்பவர்கள் சிறந்த லாபத்தைக் காண்பார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத திசையில் இருந்து உங்களுக்கு திடீரென தொழில் வாய்ப்புகள் கிட்டும். சட்டச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் தொழில் ஒப்பந்தம் சார்ந்த ஆவணங்களில் கையொப்பமிடுமுன் கவனம் தேவை.
தொழில் வல்லுனர்கள் :
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். எனவே உங்கள் முயற்சிக்கு நீங்கள் நல்ல பலன்களைக் காண்பீர்கள். என்றாலும் பொறுமை கடலினும் பெரிது என்பதை இப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் பொறுமை, உங்கள் தகுதி, திறமை மற்றும் முயற்சிகள் குறிப்பாக தலைமை தாங்கும் பண்பு போன்றவற்றிற்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். விடா முயற்சி உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் உங்கள் நாடி வரும். அதன் மூலம் நீங்கள் ஆதாயமும் வெற்றியும் பெறுவீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வெற்றி காண : அங்காரக பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது. துன்பம் நேர்கையில் இன்பம் அளிப்பது போல உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்கள் கண்கள் குறித்து கவனமாக இருங்கள். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள் :
கடக ராசி மாணவர்களுக்கு சென்ற மாதத்தை விட இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும். என்றாலும் நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தி உங்கள் கவனம் சிதறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஊக்கம் கிடைக்கும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். கலை மற்றும் படைப்புத் துறையில் இருக்கும் மாணவர்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதனை கடினமாக உணர்வார்கள்.
கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை
சுப நாட்கள் : 1,2,3, 9, 10, 11, 12, 13, 14, 20, 24, 25, 31
அசுப நாட்கள் : 4, 5, 6, 8, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 26, 27, 28, 29, 30.
