மகரம் ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Magaram Rasi Palan 2021

மகர ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன் :
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பது போல இந்த மாதம் மகர ராசி அன்பர்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிடைக்கும். பணியில் உங்கள் திறமை பளிச்சிடும். குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் பொங்கும். அன்பும் அரவணைப்பும் குடும்ப உறவை வலுப்படுத்தும். மாதக் கடைசியில் வருமானம் உயர்ந்து பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் போட்டிகள் குறித்த கவலை இல்லை என்றாலும் தொழிலில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இருக்காது. தொழில் அல்லது வியாபாரம் ஸ்திரமான நிலையில் ஓடும். கவனச் சிதறல் காரணமாக மாணவர்கள் மனதில் பதட்ட நிலை இருக்கும். மாணவர்கள் அதிக முயற்சியுடனும் கவனமுடனும் படிக்க வேண்டும். ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் சிறு சிறு உபாதைகள் வந்து போகும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு :
இந்த மாதம் உங்கள் மனதில் அன்பு, காதல், பாசம் பொங்கிப் பெருகும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உண்மையான அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புரிதலும் விட்டுக் கொடுத்துப் போதலும் அனுசரித்து நடந்து கொள்வதும் உறவை வலுப்படுத்தும் என்பதால் அதனைப் பின்பற்றி நடப்பதன் மூலம் குடும்பத்தின் நல்லுறவைப் பேண இயலும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெற : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
புதுமையான முறையில் உங்கள் வருமானத்தைப் பெருக்க பல புதுமையான வழி முறைகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். உங்களின் இந்த முயற்சி மாத ஆரம்பத்தில் இருக்கும் பணப்பற்றாக்குறையை நீக்கி மாதத்தின் இடைப் பகுதியில் லாபத்தை அளிக்கும். அதன் மூலம் உங்கள் நிதிநிலை மேம்படும். நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இது ஏற்ற நேரமாக இருக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
வேலை :
புத்தியுள்ளவர் எளிதில் வெற்றி அடைவார்கள் என்பதை உணர்ந்து இந்த மாதம் நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயலாற்றுவீர்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பணிகளை ஆற்றுவீர்கள். நீங்கள் ஊடகங்களில் பணி புரிபவர் என்றால் இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நேரம் என்று கூறலாம். நீங்கள் மற்றவர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
தொழில் :
அதிர்ஷ்டமும் வாய்ப்பும் ஒருமுறை தான் வாசல் கதவைத் தட்டும் என்பார்கள். அத்தகைய பொன்னான வாய்ப்பு இந்த மாதம் நீங்கள் சந்திப்பீர்கள்.அந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் தயாராக இருங்கள். தொழிலில் போட்டியாளர்களை நீங்கள் வெற்றி காண்பீர்கள். போட்டியாளர்கள் அதிகம் இருந்தாலும் அவர்களை எல்லாம் எதிர் கொண்டு நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள் :
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் நாம் இறைவனை நினைக்க மறந்து விடுவோம். இந்த மாதம் நடப்பவை யாவும் உங்கள் விருப்பம் போல இருக்க வாய்ப்பில்லை. உங்கள் வாயால் வம்பை வளர்த்துக் கொள்ளும் தருணம் ஏற்படும் என்பதால் தொழில் செய்யும் இடத்தில் நீங்கள் பிறரை விமர்சிக்கவும் அதனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாகவும் சாதுரியத்துடனும் செயல்படுங்கள். பேச்சில் கவனம் தேவை. கடுமையான வார்த்தைகளைத் தவிருங்கள். பக்குவமாக நடந்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை
ஆரோக்கியம் :
மகர அராசி இளம் வயது அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வயதில் மூத்தவர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. என்றாலும் மத்திம வயதில் இருப்பவர்கள் மூட்டு வலி, தசை வலி போன்ற உபாதைகளை சந்திக்க நேரும். சிறிய அளவிலான உபாதைகள் என்றாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. உங்கள் உடல் நலனை காத்துக் கொள்ள அவ்வப்பொழுது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : குரு பூஜை
மாணவர்கள் :
ஆரம்பக் கல்வி பயிலும் மகர ராசி மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கவனம் சிதறாமல் காத்துக் கொள்ள வேண்டும். உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும். அவர்கள் சிறப்பாக தேர்வுகளை எழுதி வெற்றி காண்பார்கள். விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயிலும் வகையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்படுவார்கள்.
கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
சுப நாட்கள் : 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 22, 21, 30, 31.
அசுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 16, 23, 24, 25, 26, 27, 28, 29
