கும்பம் ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Kumbam Rasi Palan 2021

கும்பம் ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன்:
கும்ப ராசி அன்பர்களே ! நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல இந்த மாதம் இரண்டு வித பலன்களையும் நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று கூறலாம். அதாவது உங்கள் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். பணம் சம்பாதிப்பவர்களுக்குத் தான் பணத்தின் அருமை தெரியும் என்பது போல நீங்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை நீங்கள் சேமிக்க எண்ணுவீர்கள். சேமிப்பு என்பதும் செலவு தான் எனக் கருதுவீர்கள். ஆனால் இது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் நடப்புத் தேவைகளை நிறைவேற்றுமா என்றால் இல்லை தானே என்று கூற வேண்டும். அந்த வகையில் நீங்கள் அவர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்குவீர்கள். உங்கள் வருமானம் பெருகும். சொந்தத் தொழில் செயும் கும்ப ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறப்பாகவும் சுறுசுறுப்புடனும் தொழிலை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் முயற்சி எண்ணம் இருந்தால் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை காரணமாக நல்லிணக்க உறவு மேம்படும். உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சிறிய உடல் உபாதைகள் என்றாலும் உடனடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு :
இரு மனம் இணையும் காதல் உறவில் காற்று புகுவதற்கு கூட அனுமதி தருவதில்லை அன்பு மனங்கள். ஆனால் இந்த மாதம் இளம் வயது கும்ப ராசி அன்பர்கள் தங்கள் திருமண விஷயத்தில் பெரியோர்களின் தலையீடு காரணமாக அதிருப்தி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. திருமணமான தம்பதிகள் இடையே பரஸ்பர புரிதல் இருக்கும் காரணத்தால் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒற்றுமையும் நல்லிணக்க உறவும் மேம்படும் எனலாம். அன்னியோன்யம் பெருகும். குடும்ப உறவினர்கள்,அக்கம்பக்கம் மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை இருக்கும். அது உங்களுக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் நீங்கள் சிறந்த முறையில் நிறைந்த வருமானம் ஈட்டுவீர்கள். உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றாலும் நீங்கள் எண்ணி எண்ணிச் செலவுகளை மேற்கொள்வீர்கள். உங்களின் இந்தச் செயல் உங்களுக்கு கருமி என்ற பட்டத்தைப் பெற்றுத் தரும். வரும் வருமானத்தை எதிர் கால நலன் கருதி சேமிப்பீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை
வேலை :
பணியைப் பொறுத்தவரை சிறந்த பலன்களைக் காண நீங்கள் சிறிது பொறுமை காக்க வேண்டும். பிரச்சினைகளை தீர்க்கவே நேரம் சரியாக இருக்கின்றது. இதில் எங்கே நான் சிறப்பாக வேலை செய்வது என்கிற அலுப்பு உங்கள் பிரச்சினை தீர்க்கும் திறமையைக் கூட சிறிது மழுங்கடிக்க வாய்ப்பு உள்ளது. பட்டை தீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். முக்கியமான பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டி இருந்தால் இந்த மாதம் அதனை மேற்கொள்ளாமல் சிறிது தள்ளிப் போடுவது நல்லது.
தொழில் :
தொழில் என்றால் போட்டிகள் இருக்கத் தானே செய்யும். அது சகஜம் தான் என்றாலும் இந்த மாதம் நீங்கள் அதிக அளவில் போட்டிகளை சந்திக்க நேரும். இதனால் உங்கள் கவனம் சிதறி உங்கள் முன்னேற்றம் தடைபடும் வாய்ப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எரிகிற நெருப்பில் எண்ணெய் போல இவற்றுடன் தடைகளுடன் தாமதங்களும் சேர்ந்து உங்களை கவலைக்கு உள்ளாக்கும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். உங்கள் செயல்திறன் படிப்படியாக முன்னேற்றம் காணும். குறுகிய பயணங்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள் :
கும்ப ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சோம்பல் தன்மை நிறைந்து காணப்படும். உங்கள் உழைப்பை மந்த கதியில் எடுத்துச் செல்லும். உங்கள் உடலும் மனமும் இரு வேறு திசைகளில் செயல்படும். மனது ஊக்கத்துடன் இருந்தாலும் உங்கள் உடல் நிலை ஓய்வை நாடும். எனவே மற்றவர் உதவியுடன் நீங்கள் பணிகளை மேற்கொள்வதன் மூலம் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க உங்களால் இயலும். ஞாபக மறதி உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.
உங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சுக்கிரன் பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்களுக்கு மாசு காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாசு நிறைந்த இடத்திற்கு செல்வதைத் தவிர்க்கவும். மேலும் கடந்த காலத்தில் இருந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் தலை தூக்கும் என்பதால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவம் மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரக பூஜை
மாணவர்கள் :
கும்ப ராசி மாணவ மாணவியர்களுக்கு இந்த மாதம் மனதை ஒருமுகப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பதால் மிகவும் கவனத்துடன் கல்வி பயில வேண்டும். அதுமட்டுமின்றி படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்வதையும் நீங்கள் கடினமாக உணர்வீர்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் படிப்பில் கவனம் மற்றும் ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ள இயலும்.
கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை
சுப நாட்கள் : 1,2,3,4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 17, 18, 19, 20, 16
அசுப நாட்கள் : 13, 14, 15, 22, 21, 27, 28, 2923 24, 25, 26, 30, 31.
