மீனம் ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Meenam Rasi Palan 2021

மீன ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன்:
இளம் வயது மீன ராசி காதலர்கள் தங்கள் துணை மூலம் சில வற்புறுத்தலுக்கு ஆளாவீர்கள். திருமணம் செய்து கொள்ள வேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளாவீர்கள். ஆனால் சில காரணங்களுக்காக நீங்கள் திருமணத்தை தள்ளிப் போடுவீர்கள். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை அனுகூலங்கள் இருக்கும். உறவில் நல்லிணக்கம் இருக்கும். புதிய தொழில் மூலம் உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். நீங்கள் ஆன்மீகக் காரிங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனத்துடன் ஈடுபடுவார்கள். கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். உங்கள் ஆரோக்கிய.ம் சிறப்பாக இருக்கும். வயதானவர்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
வேலை :
வேலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும். சக பணியாளர்களிடம் நீங்கள் வெளிப்படையாகப் பேசுவீர்கள். இதனால் சில கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேரும். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் திறன் இந்த மாதம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். உங்கள் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
காதல் / குடும்ப உறவு :
உங்கள் காதல் உறவில் சில பிரச்சினைகள் எழும். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். சில காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்ற முயற்சி மேற்கொண்டு அதில் தோல்வியைத் தழுவுவார்கள். திருமணமான தம்பதிகள் மனதை அமைதியாக வைத்திருக்க குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்ல விரும்புவீர்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழக வேண்டும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : விஷ்ணு பூஜை
நிதிநிலை :
உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும் வகையில் இந்த மாதம் கிரக நிலைகள் உள்ளது. புதிய தொழில் மூலம் நீங்கள் உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். இந்த மாதம் நிதிநிலையில் ஏற்ற நிலை காண்பீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரக பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சிறிய அளவிலான பாதிப்புகள் என்றாலும் உடனடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். வயதில் மூத்தவர்கள். சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
தொழில் :
இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடைபெறும். அதன் மூலம் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். புதிய தொழில் வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். அதில் நீங்கள் சிறந்த லாபமும் காண்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள் :
மீன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் பணியிடத்தில் அனுகூலமான சூழல்களை சந்திப்பார்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். புதிய பணிகள் மற்றும் பொறுப்புகள் உங்களை நாடி வரும். உங்கள் திறமையை வெளிப்படுத்தி அதில் நீங்கள் சாதனைகளைப் புரிவீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பல புதிய திட்டங்களை வகுத்து அதன் மூலம் நீங்கள் தொழில் அபிவிருத்தி செய்வீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சுக்கிரன் பூஜை
மாணவர்கள் :
கல்வி பயிலும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சில இடையூறுகளை சந்திக்க நேரும். கவனச் சிதறல் காரணமாக சில தடைகளை சந்திக்க நேரும். ஆரய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறிது கவனமுடன் படித்தால் தான் வெற்றியைப் பெற இயலும்.
கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை
சுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 8,12, 15, 21, 23 24, 25, 26, 27, 28, 29, 31
அசுப நாட்கள் : 7, 9, 10, 11, 13, 14, 16 ,17, 18, 19, 20, 22, 30
